ஹோட்டலில் வாங்க வேண்டாம்… வீட்டிலேயே செய்யலாம் ரூமாலி ரொட்டி…

202 0

ரூமாலி ரொட்டி மெல்லிய கைகுட்டை போன்று இருக்கும். இந்த ரொட்டி தந்தூரி வகைகளுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்ஹோட்டலில் வாங்க வேண்டாம்... வீட்டிலேயே செய்யலாம் ரூமாலி ரொட்டி... | rumali  roti

தேவையான பொருட்கள்

மைதா மாவு – 2 கப்

கோதுமை மாவு – 1 1/2 கப்

பால் பவுடர் – கால் கப்

உப்பு – சிறிதளவு

சர்க்கரை பவுடர் – 3 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கோதுமை மாவு, பால் பவுடர், உப்பு, சர்க்கரை பவுடர், 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்த பிறகு லேசாக தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து கொள்ளுங்கள்.

இந்த மாவு பூரி மாவுக்கு பிசைவது போல் அதிக கெட்டியாக இல்லாமல், கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ள வேண்டும். அதை நேரம் மாவை நன்றாக அடித்து பிசைய, இடி உரலில் இருக்கும் அந்த குழவியை வைத்து ஐந்து நிமிடம் இந்த மாவின் மீது அழுத்தி அடித்தால் போதும் மாவு மிருதுவாகி விடும்.

இல்லையென்றால் மாவை பரோட்டா மாவு பிசைவதை போல் அதிக சிரமப்பட்டு பிசைய வேண்டியிருக்கும்.

பிசைந்த மாவை இரண்டு மணி நேரம் வரை அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி இதை சப்பாத்தி தேய்க்கும் கட்டையில் வைத்து நல்ல மெலிதான ரொட்டியாக திரட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

அதாவது திரட்டிய பிறகு நாம் கையில் வைத்து பார்த்தால் கை தெரிய வேண்டும். மெல்லிய துணி பதத்திற்கு இந்த மாவை தேய்க்க வேண்டும். இந்த ரொட்டி சுட இரும்பு கடாய் அல்லது இண்டாலி கடாய் இரண்டில் ஏதாவது ஒன்றை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்தாக அடுப்பை பற்ற வைத்து வெறும் கடாயை வைத்து ஒரு முறை நன்றாக சூடுபடுத்திய பிறகு, கடாயை அடுப்பில் திருப்பி போட்டு விடுங்கள். அதாவது கடாயின் அடிப்புறம் மேலே இருப்பது போல் இருக்க வேண்டும்.

இப்போது ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இப்போது சூடான கடாயின் மேல் உப்பு தண்ணீரை தெளித்த பிறகு நீங்கள் தேய்த்து வைத்திருக்கும் ரொட்டியை அதன் மேல் போட்டு விடுங்கள்.

ரொட்டியை போட்ட பிறகு டிஷ்யூ பேப்பர் வைத்து லேசாக மேலே ஒட்டி எடுங்கள். அல்லது காட்டன் துணி இருந்தாலும் வைத்து ஒட்டி எடுங்கள். ரொட்டி லேசாக உப்பி வரும். ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு ரொட்டியை எடுத்து மறுபடியும் இன்னொரு முறை திருப்பி போடுங்கள்.

அதன் பிறகும் இதே போல் துணி வைத்து மேலே லேசாக அழுத்தி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான ரூமாலி ரொட்டி நாம் வீட்டிலே செய்து விட்டோம்.

Related Post

லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னி- தமன்னா போட்டோவிற்கு ரசிகர் கமெண்ட், அப்படி என்ன போட்டோ

Posted by - June 13, 2023 0
நடிகை தமன்னா தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா படிக்காதவன், பையா, சிறுத்தை, அயன், சுறா, வீரம் என வரிசையாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து…

அச்சு அசல் அஜித் போலவே இருக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்.. நீங்க அவரை பார்த்து இருக்கீங்களா! இதோ புகைப்படம்

Posted by - October 11, 2025 0
அஜித் தமிழ் சினிமாவில் டாப் 3 நட்சத்திரங்களில் ஒருவராக அஜித் இருக்கிறார். இந்த ஆண்டு குட் பேட் அக்லி எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ள அஜித்,…

ஆன்மீக நடிகையிடம் லீலைகளை காட்டிய நடிகர் அர்ஜுன்..தெறித்து ஓடிய பிரபல நடிகை

Posted by - February 22, 2023 0
90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரஞ்சிதா. இவர் 1992 -ம் ஆண்டு வெளியான “நாடோடி தென்றல்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.…

மது வெறியை கட்டுபடுத்தும் எளிய மருந்துகள்,மாத்திரைகள்- ஆய்வில் தகவல்.!

Posted by - March 6, 2023 0
மது அளவை குறைக்க வேண்டும் என்று விரும்புகின்ற நபர்களை மேலும் ஊக்கப்படுத்துவதாக இந்த மருந்து அமையும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.. அளவுக்கு அதிகமாக மது அருந்துவது எண்ணற்ற…

“மணி பிளான்ட்” வீட்டில் வைத்தால் பணம் சேரும் என்பது உண்மையா?

Posted by - March 28, 2023 0
Money plant மணி பிளான்ட் வைத்தால் பணம் வரும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் எங்கு, எப்படி வைத்தால் பணம் வரும், மணி பிளான்ட்டின் தன்மை என்பது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *