ஆந்திராவில் முதியவர் கிட்னியில் 3 ஆயிரம் கற்கள்- டாக்டர்கள் அதிர்ச்சி

234 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உறவினர்கள் சேர்த்தனர்.75 வயது முதியவர் உடலில் 3,000 சிறுநீரக கற்கள்... ஆபரேஷனே இல்லாமல் அகற்றிய  மருத்துவர்கள்! | Tirupati Achievement of removing 3000 stones from old mans  kidney through key hole treatment ...

முதியவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருடைய கிட்னியில் கற்கள் இருப்பதை அறிந்தனர். எனவே அவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் கீ ஹோல் முறைப்படி ( சிறிய ஓட்டை போட்டு அதன்மூலம் கற்களை எடுப்பது) சிகிச்சை அளித்து கற்களை டாக்டர்கள் வெளியில் எடுத்தனர்.

வெளியில் எடுக்கப்பட்ட கற்களை எண்ணி பார்த்தபோது அந்த எண்ணிக்கை ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் என அதிகரித்து 3 ஆயிரத்தில் முடிவடைந்தது. இதனால் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

3 ஆயிரம் கற்களையும் முதியவர் ஒருவரின் கிட்னியில் இருந்து அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன சிகிச்சை முறையில் வெளியில் எடுத்த டாக்டர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். அந்த முதியவர் இப்போது உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Post

கருணாநிதி, எம்.ஜி.ஆர் வணங்கிய டி.ஆர்.எஸ்! – மார்டன் தியேட்டர்ஸின் கதை

Posted by - December 15, 2023 0
சினிமா தயாரிப்பு தொழிலில் கொல்கத்தாதான் கோலோச்சிக்கொண்டிருந்தது. சினிமா தயாரிப்பு தொடர்பான எல்லா வேலைகளுக்கும் கொல்கத்தா செல்ல வேண்டியிருந்தது. அதற்கு மாற்றாக சேலத்திலேயே ஒரு ஸ்டூடியோ தொடங்கினால் என்ன?…

திருப்பதி தரிசன முறையில் அதிரடி மாற்றம்… தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!

Posted by - May 28, 2023 0
ஒவ்வொரு வியாழன் அன்றும் சுமார் அரை மணி நேரம் கூடுதலாக இலவச தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்கலாம் திருப்பதியில் மேலும் 22 ஆயிரம் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசன வாய்ப்பு…

அமைச்சர் உதயநிதிக்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம்!

Posted by - April 20, 2024 0
சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த்…

மத்திய பிரதேசத்தில் மனைவிகளுக்கிடையே தகராறில் கணவர் மீது துப்பாக்கி சூடு

Posted by - February 20, 2023 0
போபால் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்தவர் தாகர்கான். இவருக்கு அஞ்சும், ஹூமாகான் என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி அஞ்சும் என்பவருடன்…

இன்ஸ்டாவில் பழக்கம்: ரூம் போட்டு பிரிட்டிஷ் தோழியிடம் இந்தியர் செய்த லீலை! டெல்லியில் பரபரப்பு

Posted by - March 13, 2025 0
சமூக வலைதளங்களால் எந்த அளவுக்கு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறதோ அதே அளவுக்கு ஆபத்துகளும் சூழ்ந்திருக்கின்றன டெல்லி ஹோட்டலில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் சந்தித்த நபரால் பாலியல் வன்கொடுமை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *