அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்திய பாஜக அரசுதான்: பழனிசாமி தகவல்

168 0

சென்னை: அதி​முக ஆட்​சியை காப்​பாற்​றியது மத்​திய பாஜக அரசு​தான். அதற்கு நன்​றி​யுடன் இருக்​கிறோம் என்று அண்ணா பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.

அதி​முக சார்​பில் அண்​ணா​வின் 117-வது பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டம், வடபழனி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் கட்​சி​யின் பொதுச்​ செயலாளர் பழனி​சாமி பங்​கேற்று ஏழை, எளியோ​ருக்கு நலத்திட்ட உதவி​களை வழங்​கி​னார். கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: கடமை, கண்​ணி​யம், கட்​டுப்​பாடு என்ற தாரக மந்​திரத்தை நமக்கு போதித்​தவர் பேரறிஞர் அண்​ணா.சிறந்த நுண்​ணறி​வு, எழுத்​து, மொழிப் புலமை, மேடைப் பேச்​சு, அரசியல் நாகரி​கம், தொண்​டர்​களை ஈர்க்​கும் அன்​பு, போராட்ட குணம், பகுத்​தறிவு சிந்​தனை, ஆளு​மைத்​திறன், தலை​மைப் பண்​பு,எளிமை​யான வாழ்வு என அனைத்​தி​லும் அன்​னாந்து பார்க்​க வைக்கக் கூடிய​வர்​தான் அண்​ணா. ஏழை​யின் சிரிப்​பில் இறைவனை காண்​போம் என்​றார். அவரது மறைவுக்கு பிறகு, அவரது கனவு​களை நனவாக்க ஏராள​மான திட்​டங்​கள் எம்​ஜிஆர் கொண்​டு​வந்​தார்.2011 முதல் 2021 வரையி​லான அதி​முக ஆட்​சி, பொற்​கால ஆட்​சி. இதில் 17 அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள் திறக்​கப்​பட்​டன. திமுக​வின் 4 ஆண்டு ஆட்​சி​யில் 1 மருத்​து​வக் கல்​லூரியைக்​கூட கொண்​டு​வர​வில்​லை. திமுக ஆட்​சி​யில் மக்​களுக்கும், காவலர்​
களுக்​கும் பாது​காப்பு இல்​லை. இந்த ஆட்​சி​யில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​கெட்​டுள்​ளது. யாருக்​கும் பாது​காப்பு இல்​லை. 6 காவலர்​கள் கொல்​லப்​பட்​டுள்​ளனர். ஏழைகளின் வறுமையை பயன்​படுத்தி சிறுநீரகத்தை திருடு​கின்​றனர்.

அதி​முக ஆட்​சிக்கு வந்​ததும், திருமண உதவி திட்​டம், அம்மா இரு சக்கர வாகன திட்​டம், மடிக்​கணினி திட்​டம் ஆகியவை மீண்​டும் செயல்​படுத்​தப்​படும். இன்​றைக்கு சிலர் அதி​முகவை அழிக்​கப் பார்க்​கிறார்​கள். அதி​முகவை எவராலும் ஒன்​றும் செய்ய முடி​யாது. எங்​களுக்கு ஆட்சி அதி​காரத்​தை​விட தன்​மானம்​தான் முக்​கி​யம். அதை இம்​மியள​வும் விட்​டுக் கொடுக்க மாட்​டேன்.

அதி​முக ஆட்​சியை கவிழ்க்க வாக்​களித்​தவர்​களை​யும் மன்​னித்து துணை முதல்​வர் பதவி கொடுத்​தோம். அவர்​கள்​தான் அதி​முக​வினரின் கோயி​லான எம்​ஜிஆர் மாளி​கையை தாக்​கினர். இவர்​களை எல்​லாம் கட்​சி​யில் சேர்க்க வேண்​டு​மா? நான் எதற்​கும் அஞ்ச மாட்​டேன். யாரும் என்னை மிரட்​டிப் பார்க்க முடி​யாது.

சிலர் அதி​முகவை கபளீகரம் செய்து ஆட்​சியை கைப்​பற்​றப் பார்த்​தார்​கள். அப்​போது ஆட்​சியை காப்​பாற்​றிக் கொடுத்​தது மத்​திய ஆட்​சி​யில் இருக்​கும் பாஜக​தான்​. அவர்​களுக்கு நன்​றியோடு இருக்​கிறோம். கூட்​டணி சேரு​வது என்​பது, கட்சி ஆட்​சிக்கு வர வேண்​டும். எதிரி​களை வீழ்த்த வேண்​டும் என்​ற அடிப்​படை​யில் தான். அதி​முகவை காப்​பாற்ற அனை​வரும் துணிந்து நிற்க வேண்​டும். அதி​முக​வுக்கு எவர் துரோகம் செய்​தா​லும் நடுரோட்​டில் நிற்​பார்​கள், விலாசம் இல்​லாமல் போய்​விடு​வார்​கள். இவ்​வாறு அவர் பேசினார்.

Related Post

Generated Image February 09 2026 3 52PM

ரூ.10.71 லட்சம் கோடி கடன் சுமை

Posted by - February 17, 2026 0
Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசின் கடன்சுமை 2027ம் நிதியாண்டின் முடிவில் ரூ.10.71 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. Tamil…
Generated Image January 16 2026 5 04PM

‘‘திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ – பொங்கல் விழாவில் பழனிசாமி பேச்சு

Posted by - January 16, 2026 0
மேட்டூர்: “எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும், இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுக ஆட்சி…
ChatGPT Image Feb 18 2026 10 50 45 AM

📢 தமிழ்நாடு நிதிநிலை: இலவசங்கள் அதிகரிப்பு – நிர்வாக அதிகாரிகளின் பொறுப்பு என்ன?

Posted by - February 18, 2026 0
📢 தமிழ்நாடு நிதிநிலை: இலவசங்கள், மானியங்கள் – நிர்வாகத்தின் பொறுப்பு என்ன? சென்னை:தமிழ்நாட்டில் சமூகநலத் திட்டங்கள் மற்றும் மானிய செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் கடன்…

தீர்ப்பு வழங்கியதற்காகவே மோசமாக விமர்சிக்கின்றனர்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

Posted by - October 6, 2025 0
சென்னை: வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பின்புலம் குறித்து சமூக வளைதளத்தில் மோசமாக விமர்சிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். யூடியூப்…

பா.ம.க.வில் இருந்து அன்புமணி நீக்கம்- ராமதாஸ் அதிரடி

Posted by - September 11, 2025 0
விளக்கமளிக்காததால் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவே அர்த்தம். இதுவரை எவரும் கட்சியில் செயல்படாத வகையில் தான்தோன்றித்தனமாக அன்புமணி செயல்பட்டுள்ளார்.அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு உரிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *