“அதிமுக வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது.. அரசியலில் பக்குவப்படவில்லை” – கடம்பூர் ராஜூ விமர்சனம்

266 0

ஒன்றிய அரசு என்று கூறும் திமுகவிற்கு எதிராக பேசி தான் வருகிறார் தவிர எந்த எதிர்வினையும் அவர் ஆற்றவில்லை என கடம்பூர் ராஜூ கேள்வி

தானாக விரும்பி வந்து கட்சியில் சேருபவர்களை எந்த அரசியல் கட்சியினரும் சேர்த்துக் கொள்வார்கள், இந்த அரசியல் அரிச்சுவடி கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகிய சில நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த சி.டி.நிர்மல் குமாரைத் தொடர்ந்து திலீப் கண்ணன், அம்மு என்கிற ஜோதி, கிருஷ்ணன், விஜய் உள்ளிட்டோரும் அதிமுகவில் இணைந்தனர். இதற்கு பதிலடியாக, மதுரையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் 50க்கும் அதிகமான அதிமுகவினர் பாஜகவில் இணைந்தனர்.

இச்சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் எரிக்கப்பட்ட நிலையில், கண்டன சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் தினேஷ் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், பாஜகவை கண்டித்து அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் நியூஸ்18 தமிழ்நாடுக்கு சிறப்பு பேட்டி அளித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, பாஜக ஐடி விங் நிர்வாகி அதிமுகவில் இணைந்தது கண்டு அண்ணாமலை மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஏன் பதற்றப்பட வேண்டும் என்பது எங்களுக்கு புரியாத புதிராக உள்ளது.ஒரு கட்சியில் இருந்து பிரிந்து மற்ற கட்சிகளுக்கு செல்வது சகஜமான ஒன்று, அதிமுகவிலிருந்து பலரும் பாஜகவிற்கு சென்று உள்ளனர். அதிமுகவிற்கு திமுகவில் நிர்மல் குமார் இணைந்து இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

கோவில்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருவருபடத்தை எரித்தவர் ஒரு விளம்பர விரும்பி.  அவரை மனநல மருத்துவமனை தான் சேர்க்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், அவர் நடவடிக்கை எடுப்பது குறித்து பொறுத்து இருந்து பார்க்கலாம். அண்ணாமலை என்ன எதிர்வினை ஆற்றுவார் என்று பார்ப்போம், ஒன்றிய அரசு என்று கூறும் திமுகவிற்கு எதிராக பேசி தான் வருகிறார் தவிர எந்த எதிர்வினையும் அவர் ஆற்றவில்லை.அதிமுக வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது அவர் இன்னும் அரசியலில் பக்குவப்படவில்லை, தானாக விரும்பி வந்து கட்சியில் சேருபவர்களை எந்த அரசியல் கட்சியினரும் சேர்த்துக் கொள்வார்கள், இந்த அரசியல் அரிச்சுவடி கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை,எங்களுடன் பாஜக கூட்டணி சேர்ந்த காரணத்தினால் தான் இன்றைக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த கட்சிக்கு கிடைத்துள்ளனர்.96ல் பாஜக அரசு மத்தியில் அமைவதற்கு அதிமுக தான் உறுதுணையாக இருந்தது,அதிமுகவை முன்னே எந்த இயக்கமும் தமிழகத்தில் இல்லை, இந்த அண்ணாமலை இல்லை எந்த அண்ணாமலை வந்தாலும் முடியாது,தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாத என்றார்.

Related Post

மகளிர் உரிமை தொகை ரூ.1000 இன்னும் வரலியா?அப்ளை பண்ணிட்டீங்களா? மெசேஜ் வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும்

Posted by - September 23, 2023 0
சென்னை: மகளிர் உரிமைத்தொகையில் இன்னொரு சிறப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. தமிழக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பானது, பெரும் நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டம்…

“வெளியான Report – கலக்கத்தில் திமுக” ComeBack அதிமுக – பாஜக பூஸ்டில் EPS..!

Posted by - April 18, 2025 0
“தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் ரிப்போர்ட் சொல்லும் முடிவுகள் அதிமுகவிற்கு சாதகமாக இருப்பது, திமுகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே அமைந்துள்ளது” 2026 தேர்தல்…

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை:கோரிக்கை நிறைவேறும்வரை பின்வாங்கப் போவதில்லை என உறுதி

Posted by - January 6, 2026 0
பள்ளிக்கல்வித் துறைஅதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன் வைத்து, இடைநிலை பதிவுமூப்பு…

பேருந்து ஓட்டும்போது செல்போன்.. அரசு ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத் துறை பகீர் எச்சரிக்கை!

Posted by - December 23, 2024 0
அதனை மீறி செல்போன் பயன்படுத்தியபடி அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன. செல்போன் பயன்படுத்தும் அரசு பேருந்து ஓட்டுநர்களை போக்குவரத்துத் துறை…

ஒரே நாளில் வெளியாகும் 5 திரைப்படங்கள் – எப்போது தெரியுமா..?

Posted by - September 26, 2024 0
ஒரே நாளில் வெளியாகும் 5 திரைப்படங்கள் – எப்போது தெரியுமா..? சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரே நாளில் 5 திரைப்படங்கள் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *