டிசம்பர் 10-ம் தேதி இந்தியாவில் மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம். இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அடுத்து மோட்டோ ஜி15 ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.மோட்டோ ஜி15 ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) உடன் இந்த போன் அறிமுகமாகும். இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி15 அம்சங்கள் (Moto G15 specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே எடன் இந்த மோட்டோ ஜி15 போன் அறிமுகமாகும். மேலும் இதன்] டிஸ்பிளேவில் 2400×1080 பிக்சல்ஸ், எச்டிஆர் 10, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி81 எக்ஸ்ட்ரீம் (MediaTek Helio G81 Extreme) சிப்செட் உடன் மோட்டோ ஜி15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு மாலி ஜி52 எம்சி2 ஜிபியு (Mali-G52 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது.8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் மோட்டோ ஜி15 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் மோட்டோ ஜி15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த மோட்டோ ஜி15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), ஐபி54 ரேட்டிங் உள்ளிட்ட பல வசதிகள் இந்த போனில் உள்ளன.5200எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ ஜி15 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. மேலும் டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
Related Post
AIBE 19 Result 2025 Live Updates: How to check All India Bar Exam result when declared
AIBE 19 Result 2025 News Live Updates: The Bar Council of India has not yet released the AIBE 19 results…
10 ரூபாய்க்கு ஸ்போர்ட்ஸ் ட்ரிங்ஸ்…
ஒரு காலத்தில் பெப்சி கோக் போன்ற கார்பரேட் ட்ரிங்ஸ்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பாக கோலி சோடா, மோர், ரஸ்னா போன்ற குளிர்பானங்கள் மட்டுமே தேசத்தில் இருந்து வந்தன,…
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’சிபி ராதாகிருஷ்ணன் முதன்முறையாக மாநிலங்களவை சபாநாயகராக அவையை நடத்தவுள்ள நிலையில், தமிழ்நாடு சார்ந்த பிரச்னைகளை அவர் எப்படி கையாளப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது’ நாடாளுமன்ற குளிர்கால…
முதல் நாளே ஹிட் அடித்த பிரீமியர் எனர்ஜிஸ் ஐபிஓ…. ரூ.450 முதலீடு செய்திருந்தால் ரூ.990 கிடைத்திருக்கும்… ஒரே நாளில் 120% லாபம்..
பிரீமியர் எனர்ஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. முதல் நாள் பங்கின் விலை 120 சதவிகிதம் பிரீமியம் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. அதாவது ரூ.450க்கு வாங்கிய…
பெங்களூரு ரெயில் நிலையத்தில் கொலை செய்து டிரம்மில் அடைத்து வீசப்பட்டது பீகார் இளம்பெண்
பெங்களூரு: பெங்களூரு பையப்பனஹள்ளி சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் முனையத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் கடந்த 13-ந் தேதி காலையில் ஒரு டிரம் கிடந்தது. அதில், ஒரு…
Categories
- Sports (85)
- TN Political Zone (343)
- Trending Tamil (708)
- Viral Social (12)
- அரசியல் (221)
- இந்தியா (477)
- உலகம் (174)
- சினிமா (826)
- தமிழ்நாடு (1,131)