ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் – அண்ணாமலை காட்டம்

206 0

 

தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, அதற்கு முன்பாகப் பணியில் சேர்ந்த

இடைநிலை ஆசிரியர்களை விட அடிப்படை ஊதியம் ரூ.3,170 குறைவாக வழங்கப்படுவதை எதிர்த்து, சம வேலைக்கு சம ஊதியம் கோரி பல ஆண்டுகளாக தமிழகப் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்றிருந்த திமுக, தனது 2021 தேர்தல் வாக்குறுதி எண் 311ல், இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று போலி வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது.

ஆனால், ஆட்சிக்கு வந்து 33 மாதங்கள் கடந்தும், அது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல், ஆசிரியப் பெருமக்களின் தொடர் கோரிக்கைகளையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம், கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுப்போம் என்று வாக்குறுதி அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அதன்பிறகு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்.ஆசிரியப் பெருமக்களுக்கு திமுக இழைத்துள்ள நம்பிக்கை துரோகத்தைக் கண்டித்தும், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 10,000 ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக, ஆசிரியப் பெருமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும் என்றும், எழுத்தறிவிக்கும் ஆசிரியப் பெருமக்கள் வாழ்க்கையிலும், மாணவ மாணவியரின் கல்வியிலும் விளையாட வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறோம்.என அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Posted by - November 21, 2023 0
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த மழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை…

தமிழ்நாடு-புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது: 9.76 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் ….

Posted by - April 6, 2023 0
தேர்வு மையங்களுக்குள் மின் சாதன பொருட்கள், செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற…

“திராவிட மாடல் ஆட்சி… மக்கள் விரோத ஆட்சி” – திமுகவை நேரடியாக சாடிய தவெக தலைவர் விஜய்!

Posted by - October 28, 2024 0
தவெக முதல் மாநில மாநாட்டில் தங்களின் அரசியல் எதிரி யார் என தவெக தலைவர் விஜய் பேசினார். தவெக மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டி, வி சாலை…

அன்றாட வாழ்வில் கணிதத்தின் முக்கியத்துவம்… தேசிய கணித தினம் இன்று…

Posted by - December 22, 2023 0
கணிதம் ஒரு சுவாரஸ்யமான பாடமாகும். நீங்கள் அதை விரும்பினாலும் அல்லது வெறுத்தாலும், வாழ்வில் குழப்பங்களை தடுத்து, ஒரு தெளிவு தருகிறது என்பதை நீங்கள் மறுக்க முடியாது. கணிதம்…

TN Rain Alert: கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Posted by - November 22, 2025 0
TN Weather Update Today: தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல். தெற்கு அந்தமான் கடல் பகுதியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *