aaaa

இந்த இன்சுலின் இலை தினமும் ஒன்னு காலையில சாப்பிட்டா சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்…

145 0

இன்சுலின் செடி என்றழைக்கப்படும் இந்த செடி நீரிழிவு நோயாளிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதை எப்படி பயன்படுத்துவது, வேறு என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்று பார்க்கலாம்​இன்சுலின் செடி

மேலை நாடுகளில் இந்த இன்சுலின் செடியிலிருந்து கிடைக்கும் உட்பொருள்களில் இருந்து கிடைக்கும் சிலவற்றை மூலப்பொருளாகக் கொண்டு நீரிழிவு நோய்க்கான மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் நம் வீடுகளில் அவை வெறும் அலங்காரத்துக்கான தொட்டிச் செடியாக மட்டுமே இருக்கின்றன. அந்த இன்சுலின் செடியின் பயன்கள் என்னென்ன என்று தெரிந்து கொண்டு நாமும் பயன்படுத்துவோம்.

இன்சுலின் செடி மலைப்பிரதேசங்களிலும் காடுகளிலும் கிட்டதட்ட 10 அடி உயரம் வரைக்கும் வளரக் கூடியது.

ஆனால் வீடுகளில், தொட்டிச் செடிகளில் சிறிய அளவிலேயே வளர்கிறது. இது சாப்பிடும்போது சற்று லேசான, மிக மெல்லிய புளிப்புச் சுவை கொண்டது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் பல் துலக்கிவிட்டு, இரண்டு இலைகளை அப்படியே பச்சையாகச் சாப்பிட வேண்டும்.

அப்படி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வெகுவாகக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

இந்த இன்சுலின் செடியின் இலைகளைச் சாப்பிட்டு வந்தால், இன்சுலின் மருந்து எடுத்துக் கொள்ளும் இரண்டாம் நிலையில் உள்ள நீரிழிவு நோயாளிகளும் பயன்படுத்தலாம்.

இதிலுள்ள புளிப்புச் சுவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு, அதிகமாக இனிப்பு சாப்பிடும் எண்ணத்தையும் குறைக்கச் செய்கிறது.

இனிப்பின் மீதான ஈர்ப்பும் ஆர்வமும் இயல்பாகவே குறைய ஆரம்பிக்கும்.

நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு இன்சுலின் சுரப்பு குறைபாடு உண்டாகிற போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, அது உடலில், சருமத்தில் நமைச்சல், அரிப்பு போன்றவை உண்டாகும்.

அதோடு ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை கொஞ்சம் கொஞ்சமாக உடலின் உறுப்புகளையும் சேர்த்து பாதிக்க ஆரம்பிக்கும். அது கண்களையும் பெரிதாக பாதிக்க ஆரம்பிக்கும்.

இன்சுலின் செடியில் நம்முடைய உடலுக்குத் தேவையான புரதச்சத்தும் இரும்புச் சத்தும் அதிகமாக இருக்கிறது.

அதோடு இன்சுலின் செடியில் அதிக அளவிலான ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன.

மேலும் அஸ்காரிக் அமலம் மற்றும நிறைய பிளவனாய்டுகள் இருக்கின்றன.

ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்ற இந்த இன்சுலின் இலைகளில் நம்முடைய குடலில் வாழுகின்ற நல்ல பாக்டீரியாவான ஈகோலின் அதிக அளவு இருக்கிறது.

இதில் புரோ-பயோடிக் அதிகமாக இருப்பதால், ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. இதிலுள்ள நல்ல பாக்டீரியாவும் ப்ரக்டோசும் குடலின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

இந்த இன்சுலின் செடியில் உள்ள சோடியம் நம்முடைய உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்திருப்பதோடு இதிலுள்ள ரைசோம் சிறுநீரகத்தை ஆரோக்கிய வைத்திருக்க உதவுகிறது.

சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.

 

#healthnews #health #news #trending #type #healthcare #strong #protein #magazine #hollywood #manhealth #womanhealth #covermag #healthmag #covid #breakingnews #healthnewstoday #diabetes #trendingnews #healthfood #newsmedia #europeanbusinessmagazine #newsportal #europenews #food #naturalhealth #publichealth #diabetic #bloodsugar #cgm

Related Post

kambu thinai

கம்பு, கேழ்வரகு உடம்புக்கு நல்லதுதான்… இந்த நேரத்துல சாப்பிட்டா சிக்கல்தான்…

Posted by - May 14, 2026 0
சிறுதானியங்கள் உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை கொண்டதாக கருதப்படுவதால், சிலருக்கு தூக்கமின்மை அல்லது உடல் அசௌகரியம் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.இன்றைய காலத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு…

கோடை வெப்பத்தை குறைக்க எப்படி குளிக்கலாம்…

Posted by - April 27, 2023 0
‘ஜில்’ என்று சொன்னவுடன் ஐஸ் போன்ற குளிர்ந்த நீர் என்று பொருள் கொள்ள வேண்டாம். காலை குளியல், மாலை குளியல் இரண்டிலும் சாதாரண குழாய் நீரில் குளித்தாலே…

இனி வரமாட்டேன்.. திடீரென குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணிமேகலை! அதிர்ச்சி காரணம்

Posted by - February 27, 2023 0
மணிமேகலை முதலில் தொகுப்பாளராக ஒரு பிரபல மியூசிக் சேனலில் இருந்து புகழ்பெற்று அதன் பின் விஜய் டிவிக்கு வந்தவர் தான் மணிமேகலை. இங்கு அவர் தொகுப்பாளரில் இருந்து…

முட்டை சமைக்கப் போறீங்களா? இந்த பொருட்களை சேர்த்து சமையுங்க… சுவையோட ஆரோக்கியமும் கிடைக்கும்…!

Posted by - October 16, 2023 0
முட்டைகள் அவற்றின் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்காக உலகம் முழுவதும் உண்ணப்படும் மிகச்சிறந்த உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அவை புரதம் மற்றும் பல ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும் மற்றும்…

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 1, 2023 புதன்கிழமை

Posted by - March 1, 2023 0
இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 1, 2023 புதன்கிழமை❤️ மேஷம்✅ உத்தியோகம் பார்ப்பவர்கள் உயர்ந்த நிலையை அடைவீர்கள். பெண்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் சிறப்பாக நடைபெறும். மூலதனத்துக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *