உலக நாடுகளை தெறிக்கவிட்ட ஈரான்; 4000 கிமீ பாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை; அலறும் அமெரிக்கா,பிரிட்டன்

195 0

மத்திய கிழக்கில் போர் தொடரும் நிலையில், இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க, பிரிட்டிஷ் ராணுவ தளங்கள் அமைந்துள்ள டியாகோ கார்சியாவை ஈரான் குறிவைத்திருப்பது, ராணுவ நிபுணர்களிடையே கவலைகளை எழுப்பியுள்ளது.

மத்திய கிழக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், ஈரான் இன்று, இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ராணுவத் தளமான டியாகோ கார்சியா மீது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இந்த தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக துபாயில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டன.

4,000 கிமீ தூரத்திற்கு ஏவுகணையை ஏவி மிரட்டிய ஈரான்

வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியான ஒரு அறிக்கையின்படி, ஈரானியப் பகுதியிலிருந்து சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தத் தளத்தின் மீது, இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே இதுதான் மிகப்பெரிய மற்றும் மிகவும் அரிதான தாக்குல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஈரான் ஏவிய இரண்டு ஏவுகணைகளும் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்க அதிகாரிகள் கூறுவது என்ன.?

அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒரு ஏவுகணை நடுவானில் செயலிழந்ததாகவும், மற்றொன்று அமெரிக்க போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட இடைமறிப்பு ஏவுகணையால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகோஸ் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ள டியாகோ கார்சியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்காவின் குண்டுவீச்சு நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய அமெரிக்க-பிரிட்டிஷ் ராணுவத் தளமாகும்.

நிபுணர்களின் நினைப்புகளை பொய்யாக்கிய ஈரான்

டீகோ கார்சியாவை ஈரான் குறிவைத்திருப்பது, ராணுவ நிபுணர்களிடையே கவலைகளை எழுப்பியுள்ளது. இதுவரை, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் வரம்பு குறைவாகவே இருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் 4,000 கிலோமீட்டர் தொலைவிலிருந்து தாக்குதல் நடத்த முயன்றிருப்பது, ஐரோப்பாவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறனை டெஹ்ரான் இப்போது பெற்றுள்ளது என்பதை காட்டுகிறது. பென்டகன் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை. ஆனால், இது போரின் போக்கையே முற்றிலுமாக மாற்றிவிட்டது என்று நம்பப்படுகிறது.

ஈரானின் தெளிவான செய்தி – முன்னாள் மத்திய அமைச்சர்

ஈரான் உண்மையிலேயே டீகோ கார்சியாவைத் தாக்க முயன்றிருந்தால், அது போரின் வீச்சை கணிசமாக விரிவுபடுத்தியிருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி கூறியுள்ளார். மேலும், மத்திய கிழக்குக்கு அப்பாலும், இன்னும் தெற்கேயும் கூட தங்களால் தாக்குதல் நடத்த முடியும் என்ற தெளிவான செய்தியை ஈரான் மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்பியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமரை விமர்சித்த அப்பாஸ் அராக்சி

முன்னதாக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரைக் கடுமையாக விமர்சித்தார். ஸ்டார்மர் தனது சொந்த மக்களின் விருப்பங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்காக பிரிட்டிஷ் தளங்களை பயன்படுத்த அனுமதிப்பதாகவும் அவர் கூறினார். இது பிரிட்டிஷ் குடிமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், ஈரான் தனது தற்காப்பு உரிமையை பயன்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார். பிரிட்டனின் இந்த நடவடிக்கை தங்களை நேரடியாகப் போருக்குள் இழுத்துச் செல்வதாக ஈரான் நம்புகிறது.

சில வாரங்களுக்கு முன்பு, இந்தியப் பெருங்கடல் பகுதியில், இலங்கைக்குத் தெற்கே, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவை நீர்மூழ்கி ஏவுகணையால் மூழ்கடித்ததில், 85-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தியா நடத்திய மிலன் 2026 என்ற பலதரப்பு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுத் தாயகம் திரும்பிக் கொண்டிருந்த ஒரு போர்க்கப்பல் அது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

Generated Image November 14 2025 10 26AM

“இருமுனைப் போருக்கு தயார்“; மீண்டும் இந்தியாவை வம்புக்கிழுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

Posted by - November 14, 2025 0
இந்தியாவுடன் மறைமுகப் போரை நடத்தி வருவதாக ஏற்கனவே கூறிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், தற்போது போருக்கு தயாராக இருப்பதாகக் கூறி மீண்டும் இந்தியாவை வம்பிழுத்துள்ளார்.…

உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா

Posted by - May 27, 2025 0
எதுவுமே தனக்கு வந்தால்தான் தெரியும் என்ற சொல்வார்கள். அதுபோல, பாகிஸ்தானில் தற்போது தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை வந்த உடன் தான், அமைதிப் பேச்சுவார்த்தை வேண்டும் என்று…
qq

எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது!

Posted by - March 4, 2026 0
ஈரான் முதலில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததற்கான தகவல்கள் இல்லை என அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் கூறியிருக்கிறது. ஈரானால் இஸ்ரேலுக்குத்தான் அச்சுறுத்தலே தவிர, அமெரிக்காவுக்கு அல்ல என்று…

நீயா, நானா போட்டியில் மெட்டாவும், கனடாவும்: முற்றும் சச்சரவில் கூகுளும் சேருமா?

Posted by - July 6, 2023 0
நீயா, நானா போட்டியில் மெட்டாவும், கனடாவும்: முற்றும் சச்சரவில் கூகுளும் சேருமா?உலகின் மிகப்பெரிய இணையவழி சமூக வலைதளமான முகநூலை நடத்தி வரும் மெட்டா நிறுவனத்திற்கும் கனடா நாட்டிற்கும்…

பஹல்காம் தாக்குதல்! இன்னும் ஏன் வாயை திறக்கல! பாக்.. பிரதமரை கிழித்த பாக் வீரர்கள்

Posted by - April 24, 2025 0
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், பிரதமர் ஷேபாஸ் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் ஜம்மு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *