என்னைப் பற்றிய அரசியல் அவதூறுகளை நம்ப வேண்டாம்: தவெக நிர்வாகி ராஜ்மோகன்

212 0

சென்னை: “என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறு, வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கரூர் துக்க சம்பவம் குறித்து தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்திய அளவில் பேசுபொருளானது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மீதும், தொண்டர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.இந்நிலையில், கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உறவினர்களிடம் தவெக தலைவர் விஜய் கடந்த 2 நாட்களாக வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்து வருகிறார்.இதனிடையே, இது குறித்து தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தனது எக்ஸ் தளத்தில், “வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது. அதே சமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி.இந்த அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம். அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும். நீதிக்கான முன்னெடுப்புகள் நெடியது. பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்றுதருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Post

eps

“தமிழகத்தில் கீழ்த்தரமான குதிரை பேர கலாச்சாரம்…” – தவெக மீது பழனிசாமி காட்டம்

Posted by - May 25, 2026 0
சென்னை: “கீழ்தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு என்றும் தமிழ்நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை தவெக அறிமுகப்படுத்தியுள்ளது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
vvv

ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!

Posted by - March 16, 2026 0
கேரளா, பாண்டிச்சேரி மற்றும் அசாம் ஆகிய 3 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாததால் அங்குள்ள அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக களப்பணியைத்…
Generated Image November 24 2025 10 41AM

நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது – அண்ணாமலை

Posted by - November 24, 2025 0
நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற இலங்கை…
dmk

கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

Posted by - April 16, 2026 0
கமல்ஹாசன் திமுக-வை கடந்த தேர்தலில் விமர்சித்துப் பேசியதையும், இந்த தேர்தலில் திமுக-வை புகழ்ந்து பேசுவதையும் ஒப்பிட்டு இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். தமிழ்நாட்டில்…

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு

Posted by - January 23, 2026 0
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சம…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *