கொடி பறக்குதா..! ”தவெக – அதிமுக கூட்டணி” பிள்ளையார் சுழி போட்டாச்சு – எடப்பாடி பேச்சு

228 0

தமிழக வெற்றிக் கழகத்துடனான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற குமாரபாளையம் பரப்புரையில், பலரும் தவெக கொடியுடன் பங்கேற்றனர்.

அதிமுக கூட்டத்தில் தவெக கொடி

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இரண்டு முறை திட்டமிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று பயணம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  தொடர்ந்து கூட்டத்திற்கு மத்தியில் பேசுகையில், அதிமுகவின் கொடிகள் மட்டுமின்றி சிலர் தவெகவின் கொடிகளையும் கையில் ஏந்தி அசைத்தபடி இருந்தனர்.

”தவெக – அதிமுக கூட்டணி, பிள்ளையார் சுழி போட்டாச்சு”

அப்போது, “திமுக தலைமையில் அமைக்கின்ற கூட்டணி வலுவான கூட்டணி என ஸ்டாலின் எண்ணுகிறார். உண்மையா? அது வெற்றுக் கூட்டணி. வெல்லும் கூட்டணி என்பது அதிமுக தலைமையில் அமைகின்ற கூட்டணி. ஸ்டாலின் கூட்டணியை நம்பி இருக்கிறார். கூட்டணி தேவைதான், ஆனால் அதிமுக தலைமையில் அமைகின்ற கூட்டணி வலுவானதாக இருக்கும். அங்க பாருங்க கொடி பறக்குது (தவெக கொடியை குறிப்பிட்டு), பிள்ளையார் சுழி போட்டாச்சு (தொண்டர்கள் ஆர்பரிப்பு). ஆகாயத்தில் கோட்டை கட்டி கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள். அது கானல் நீராக தான் போகும்.

உங்கள் ஆட்சியில் மக்கள் கண்ட பலன் என்ன? துன்பம், துயரம், வேதனை இதை தானே மக்கள் கண்டார்கள். 53 மாத கால திமுக ஆட்சியில் மக்களுக்கு என ஏதேனும் ஒரு திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினீர்களா?” என ஆளுங்கட்சியை கடுமையாக குற்றம்சாட்டினார். மேலும், அதிமுக ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தொலைபேசி உரையாடல்:

முன்னதாக, கரூர் சம்பவம் தொடர்பாக கடந்த 6ம் தேதி எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜயை தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியானது. அப்போது, கூட்டணி தொடர்பாகவும் இருவரும் பேசியதாகவும், இதுதொடர்பான அடுத்தகட்ட அறிவிப்புகள் ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. திமுக எதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியில் அதிமுக மற்றும் தவெக இணைந்து செயல்பட வேண்டும் என, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் முன்னெடுப்பில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், தவெக உடனான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் கூட்டணி கணக்குகளால் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Related Post

dmk cong

திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்

Posted by - May 24, 2026 0
DMK Cong: மதச்சார்பற்ற கட்சி என முகமூடியை அணிந்துகொண்டு திமுக நாடகமாடுவதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் (Manickam Tagore) குற்றம்சாட்டியுள்ளார். DMK Cong: பாஜக உடன்…

கரூர் துயர சம்பவம்! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. 41 குடும்பங்களை தத்தெடுக்கும் விஜய்..

Posted by - October 13, 2025 0
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோகால் மூலம் விஜய் பேசினார்.…
tvk aiadmk

TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?

Posted by - May 28, 2026 0
தமிழக வெற்றிக் கழகத்தில் அடுத்தடுத்து அதிமுக-வின் முன்னாள் எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் இணைவது தவெக கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒவ்வொரு…
Gemini Generated Image mdnoecmdnoecmdno

குற்றவாளி வீட்டில் பிரியாணி சாப்பிட்ட ‘சார்’ சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் – பழனிசாமி உறுதி

Posted by - April 9, 2026 0
குற்றவாளி வீட்டில் பிரியாணி சாப்பிட்ட ‘சார்’ அதிமுக ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்று சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார். தேர்தல் அறிவிக்கப்பட்ட…
Generated Image February 09 2026 3 52PM

தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.?

Posted by - March 12, 2026 0
தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழகத்தில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் பாலியல் சம்பவங்கள் மக்களை அதிர்ச்சி அடையசெய்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *