“ஏமாற்றம் இருக்காது; மாற்றம் இருக்கும்” – துணை முதல்வர் தொடர்பான கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் சூசகம்?

171 0

திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய எஸ்.எஸ். பழனி மாணிக்கம், “உதயநிதியை துணை முதலமைச்சராக்கும் காலம் வந்துவிட்டது. உங்களுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த ஒருவரை அடையாளம் காட்டுங்கள்’’ என மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்.

சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உடனடியாக அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைச்சரவை பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப்பட்டது. இந்த பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு நிர்வாகிகள் பேசி வந்தனர். திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய எஸ்.எஸ். பழனி மாணிக்கம், “உதயநிதியை துணை முதலமைச்சராக்கும் காலம் வந்துவிட்டது. உங்களுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த ஒருவரை அடையாளம் காட்டுங்கள்’’ என மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்.

இதற்கிடையேதான் இன்று முதல்வர் ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரில் நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். அப்போது துணை முதலமைச்சர் பதவி தொடர்பாகவும், அமைச்சரவை மாற்றம் தொடர்பாகவும் நியூஸ்18 தமிழ்நாடு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “ஏமாற்றம் இருக்காது மாற்றம் இருக்கும்” என்று தெரிவித்தார். இதன்மூலம் அமைச்சரவை மாற்றம் நடக்கப்போவது உறுதியாகியுள்ளது.

முன்னதாக பேசிய முதல்வர் ஸ்டாலின், “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இரண்டு நாளில் நானும் ஆலோசனைகூட்டம் நடத்த உள்ளேன்” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், கடந்த ஆட்சியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது தொடர்பான வெள்ளை அறிக்கை எப்படி இருந்தது என உங்களுக்கே தெரியும். முதலீடுகள் ஈர்ப்பு தொடர்பாக டி.ஆர்.பி. ராஜா வெளியிட்ட அறிக்கையே வெள்ளை அறிக்கை தான்.” என்று அவர் தெரிவித்தார்.மேலும் கொளத்தூர் தொகுதி என்னுடைய சொந்த தொகுதி. வீட்டு பிள்ளை போல தான் என்னை பார்ப்பார்கள். எப்போதும் இங்கு வருவேன், நினைக்கும் போதெல்லாம் இங்கு நான் வருவேன்” என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Post

2030-ம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 சதவீதம் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

Posted by - August 30, 2023 0
சென்னை: பெங்களூருவில் செயல்பட்டு வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையம் 2019-20-ம் ஆண்டில் சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெளியேற்றப்படும் மாசு…

எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! – பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்!

Posted by - January 9, 2025 0
கடந்த மாதம் சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இணைந்து உணவுத்திருவிழா நடத்தினர். பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படுமா என்பது குறித்து துணை…

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்

Posted by - September 26, 2023 0
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம்…

தத்தளிக்கும் (தென்)தமிழகம்…ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டியது..

Posted by - December 18, 2023 0
வரலாற்றில் இல்லாத வகையில் தென் மாவட்டங்களில் மழை பெய்துள்ளதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ்…

11 முதல் மதியம் 3 மணி வரை வெளியே வராதீங்க…

Posted by - April 12, 2023 0
குளிர்பானங்கள், மதுபானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ரசாயனம் மூலம் வாழைப்பழம், மாம்பழம், தர்பூசணி ஆகியவை பழுக்கவைப்பது கண்டறியப்பட்டால், கடையின் உரிமம் ரத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *