கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி: புஷ்கரணியில் பக்தர்கள் புனித நீராடினர்

473 0

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வந்தது. தினமும் காலை, இரவில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் வெவ்வேறு வாகனங்களில் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் 9-வது நாளான நேற்று காலை 6.30 மணியில் இருந்து காலை 7.30 மணி வரை கல்யாண வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி: புஷ்கரணியில்  பக்தர்கள் புனித நீராடினர் | Brahmotsavam 9th Srinivasa Mangapuram Kalyana  Venkateswara Swamy ...

இதையடுத்து புஷ்கரணி எதிரில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாணவெங்கடேஸ்வரர், சுதர்சன சக்கரத்தாழ்வார் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு காலை 8.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை கங்கணப்பட்டர் பாலாஜி ரங்காச்சாரியார் உற்சவர்களுக்கு விஷ்வக்சேனர் ஆராதனை, புண்யாஹவச்சனம், முக சுத்தம், தூப தீப நெய்வேத்தியம், ராஜோபசாரம் செய்தார்.

மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்வித்தாா். அப்போது புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், விஷ்ணுசூக்தம், வேத மந்திரங்கள், பஞ்சசூக்த மந்திரங்கள் வேத பாராயணர்களால் ஓதப்பட்டது. சாமிக்கும், தாயார்களுக்கும் பல வண்ண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.

திருமஞ்சனம் முடிந்ததும் காலை 9.40 மணியளவில் கோவில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. சுதர்சன சக்கரத்தாழ்வாரை அர்ச்சகர்கள் 3 முறை நீரில் மூழ்கியெடுத்து ஸ்நானம் செய்வித்தனர். அப்போது கோவில் அதிகாரிகள், பக்தர்கள் புஷ்கரணியில் மூழ்கி புனித நீராடினர்.

அதைத்தொடர்ந்து புஷ்கரணியில் இருந்து உற்சவர்கள் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டனர். இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம் நடந்தது. இதோடு வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைந்தது. பானு சுவாமி, வம்சி சுவாமி ஆகியோர் போட்டுவில் சுவையான பிரசாதங்களை தயாரித்து ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கினர்.

கருட சேவை மற்றும் தேரோட்டத்தின்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர். பக்தர்களும் தினமும் 100 ஸ்ரீவாரி சேவா சங்கத்தினர் சேவை செய்தனர். சுமார் 1500 பக்தர்கள் மருத்துவ வசதிகளை பெற்றனர். பிரம்மோற்சவத்துக்காக 10 டன் மலர்கள் அலங்காரத்துக்காக பயன்படுத்தப்பட்டன.

மலர் அலங்காரத்துக்காக 50 தோட்ட ஊழியர்கள் இரவும் பகலும் பாடுபட்டனர். அவர்கள் பெங்களூரு மற்றும் சென்னையில் இருந்து வந்த பூக்களை அலங்காரத்துக்கு பயன்படுத்தினர். கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் 75 துப்புரவுப் பணியாளர்களும், முக்கியமான நாட்களில் கூடுதலாக 25 பணியாளர்களும் கோவில் வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருந்தனர்.

Related Post

கடனை திருப்பி கொடுக்காவிட்டால் வீடு தேடி வரும் ‘சாக்லேட்’ பரிசு

Posted by - September 21, 2023 0
மும்பை: கடன் தவணையை உரிய தேதியில் திருப்பித் தராத வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு சென்று ‘சாக்லேட்’ அளிக்கும் நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி…

மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா? முதுகில் குத்திய பாகிஸ்தான் ராணுவம்.. கார்கில் சொல்லும் பாடம்

Posted by - May 12, 2025 0
ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இப்படி நடந்து கொள்வது முதல்முறை அல்ல. வாஜ்பாய் காலத்தில் லாகூர் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஒரு சில வாரங்களிலேயே கார்கில் போரை தன்னிச்சையாக…

வாட்ஸ்-அப்பில் பயனர்களை கவரும் புதிய அப்டேட்கள்: அரட்டை செயலியின் தாக்கம் காரணமா?

Posted by - October 11, 2025 0
சென்னை: வாட்ஸ்-அப் செயலியில் பயனர்களை ஈர்க்கும் வகையிலான புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அது குறித்து பார்ப்போம். வாட்ஸ்-அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார்…

வியாழக்கிழமை சாய்பாபா வரலாறு….

Posted by - September 11, 2025 0
ஆரம்ப வாழ்க்கை சாய்பாபாவின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் தெளிவாக தெரியவில்லை. 1838-ல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. அவரது மதம், குடும்பம் பற்றிய விபரம் மர்மமாகவே…

ஆந்திராவில் களை எடுக்கும் போது விவசாய நிலத்தில் கிடைத்த வைர கற்கள் லட்சாதிபதியான பெண் கூலி தொழிலாளி

Posted by - July 17, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், ஓங்கோலை சேர்ந்த பெண் ஒருவர் துக்கிலி மண்டலம் ஜென்னகிரி விவசாய நிலத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது தேன் நிறத்திலான கல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *