காதலியை கொன்று உடலை தொட்டியில் மறைத்த வாலிபர் – செல்போன் அழைப்புகள் மூலம் சிக்கினார்

350 0

பிரயாக்ராஜ்:

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மகேவா பகுதியை சேர்ந்தவர் 35 வயதான பெண் ராஜ்கேசர் (வயது 35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தருமாறு ராஜ்கேசரின் குடும்பத்தினர் யமுனாபர் கர்ச்சனா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.காதலியை கொன்று உடலை தொட்டியில் மறைத்த வாலிபர் - செல்போன் அழைப்புகள் மூலம்  சிக்கினார் | Tamil News Man Arrested for Lover Murder Case in UP

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளின் பட்டியல் சேகரித்து விசாரணை நடத்தினர். இதில் ராஜ்கேசர் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற வாலிபருடன் போனில் பேசியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அரவிந்த், ராஜ்கேசரை தீவிரமாக காதலித்து வந்ததும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு காதலியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும் ராஜ்கேசரின் உடலை அப்பகுதியில் தான் புதிதாக கட்டி வரும் வீட்டு தொட்டியில் மறைத்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அரவிந்தை கைது செய்தனர்.

பின்னர் அவரது வீட்டு தொட்டியில் இருந்து ராஜ்கேசர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அரவிந்த் காதலியை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

கோவில் உண்டியலில் ரூ.100 கோடிக்கு காசோலை செலுத்திய பக்தர் – அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்

Posted by - August 25, 2023 0
அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராகலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. இந்நிலையில், கோவில்…

Voter ID இல்லையா? கவலை வேண்டாம்.. இந்த 12 ஆவண்ங்களில் ஒன்று இருந்தால் போதும்

Posted by - April 18, 2024 0
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை…

உ.பி.யில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 4 நாளில் 57 நோயாளிகள் பலி: பின்னணி என்ன?

Posted by - June 19, 2023 0
லக்னோ : உத்தரபிரதேச மாநிலம், பல்லியா நகரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 15-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி…

இமாச்சல பிரதேசத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: அடித்துச் செல்லப்படும் கார்கள்- பதற வைக்கும் வீடியோ காட்சி

Posted by - July 11, 2023 0
வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் பல மாவட்டங்கள் வெள்ளக்…

மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு

Posted by - September 28, 2023 0
இம்பால்: மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *