Voter ID இல்லையா? கவலை வேண்டாம்.. இந்த 12 ஆவண்ங்களில் ஒன்று இருந்தால் போதும்

254 0

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக,  பூத் ஸ்லிப் வழங்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டையை (_Election P_hoto Identity Card) பயன்படுத்தி தேர்தல்களில் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

EPIC அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு  புத்தகம், இந்திய பாஸ்போர்ட் உட்பட 12 அடையாள அட்டைகளில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று கூறியுள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 ஆவணங்கள்

1. ஆதார் அட்டை
2. ஓட்டுநர் உரிமம்
3. பான்கார்டு
4. ரேஷன் அட்டை
5. பாஸ்போர்ட்
6. புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம்
7.புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர் அடையாள அம்டை
8. எம், எம்எல்ஏ, எம்எல்சி அதிகாரப்பூர்வ அடையாள அட்டை
9. அங்கீகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ்
10. வங்கி மற்றும் அஞ்சல் பாஸ்புக்
11. மத்திய அரசின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை
12. தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு.

அதேவேளையில், தேர்தலில் வாக்களிக்க பூத் ஸ்லிப்பை அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையாக கருத முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பூத் ஸ்லிப்பில் வாக்காளர் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண், வாக்குச்சாவடி விவரம்  இடம் பெற்றிருக்கும். தற்போது வாக்காளரின் புகைப்படமும் பூத் ஸ்லீப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.ஆனால், இதனை வாக்காளர் அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறு எழுத்துப் பிழைகள் இருந்தால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில், கடந்த ஒன்றாம் தேதி முதல் பூத் சிலிப் வழங்கும் பணிகள் தொடங்கியது. இதற்காக, அரசு ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கி வருகின்றனர்.

Related Post

இன்று வெளியாகும் ஓலா எலக்ட்ரிக் ஐபிஓ.. விலை, கிரே மார்க்கெட் விலை இதுதான்..

Posted by - August 2, 2024 0
இன்று Ola Electric Mobility Limited இன் பங்குகள் கிரே மார்க்கெட் ரூ.17 பிரீமியத்தில் கிடைக்கின்றன என்று சந்தை பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதன் ஐபிஓ விலை, மார்க்கெட்…

கொரோனாவால் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு: மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

Posted by - April 26, 2023 0
சிம்லா : கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வந்து விடவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன. இந்த…

வீட்டு கேஸ் சிலிண்டர் விலையை தடாலடியாக உயர்த்திய மத்திய அரசு!

Posted by - April 7, 2025 0
 விலை அதிகரிப்பால் மானிய விலையில் பெறும் கேஸ் சிலிண்டர் விலை 803 ரூபாயில் இருந்து 853 ரூபாயாக அதிகரிக்க உள்ளது. வீட்டு உபயோகத்துக்கான கேஸ் சிலிண்டர் விலையை…

வங்கியில் லோன் வாங்கப்போறீங்களா..? அப்ப இந்த விஷயங்களை எல்லாம் தெரிஞ்சிவச்சிக்கோங்க!

Posted by - October 29, 2024 0
லோன் வாங்கும்போது, நீங்கள் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். இல்லை என்றால் கடன் வலைக்குள் மாட்டிக்கொண்டு தவிக்க வேண்டி இருக்கும். அந்த வகையில் நீங்கள் கருத்தில்…

‘சிபில் ஸ்கோர்’ பிரச்சினையை தீர்க்க… – சு.வெங்கடேசன் எம்.பி முன்வைக்கும் யோசனை

Posted by - June 27, 2025 0
மதுரை: ‘சிபில் ஸ்கோர்’ முறையில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க, கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை ரிசர்வ் வங்கி தீர்மானிக்க வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *