கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக ஏமாற்றி இளைஞர்கள்-இளம்பெண்களிடம் பணமோசடியில் ஈடுபடும் கும்பல்

335 0

திருப்பூர்:

திருப்பூரை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஐ.டி.துறையில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்து எளிய முறையில் பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பிய அந்த இளம்பெண் குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்ட டெலகிராம் செயலிக்குள் சென்று பார்த்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாலோ செய்தால் உங்களுக்கு கமிஷனாக பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி அவ்வாறே அந்த இளம்பெண் செய்துள்ளார்.

இவ்வாறு செய்ததன் மூலம் அவருக்கு கொஞ்சம் பணம் கிடைத்துள்ளது. பின்னர் அவருக்கு பண ஆசை மேலும் அதிகரித்தது. அதன்பிறகு ஒவ்வொரு போட்டியாக வைத்து அதில் வெற்றி பெற்றால் உங்களுக்கு கிடைக்கும் பணத்தொகை இவ்வளவு என்று அதிகப்படியான பணத்தை காட்டி இளம்பெண்ணுக்கு ஆசையை தூண்டியுள்ளனர். மேலும் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதன் மூலமாக கிடைக்கும் லாபத்தொகையை காட்டியுள்ளனர்.

இதனால் அதிக பணம் சம்பாதிக்கும் எண்ணம் அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட, ஒரு கட்டத்தில் வங்கியில் கடன் வாங்கி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார். இவ்வாறு ரூ.17 லட்சத்து 76 ஆயிரத்து 800-ஐ அந்த இளம்பெண் முதலீடு செய்தார். அதற்காக கிரிப்டோ கரன்சி தொகையும் கணக்கில் வந்துள்ளது. ஆனால் லாபத்தொகை, முதலீடு தொகை உள்ளிட்ட எந்த பணத்தையும் இளம்பெண்ணால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவருக்கு தெரியவந்தது, பணத்தாசையில் ஏமாறப்பட்டோம் என்று.

இதைத்தொடர்ந்து அந்த பெண் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவுப்படி திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி கூறும்போது, ஐ.டி., பொறியியல் பட்டதாரிகள் தான் இதுபோன்ற மோசடிகளில் அதிகம் சிக்குகிறார்கள். முதலில் கொஞ்சம் பணத்தை சம்பாதிப்பது போல் அனுப்பி வைக்கிறார்கள்.

அதன்பிறகு ஒவ்வொரு டாஸ்க் வைத்து பணத்தை அதிகம் முதலீடு செய்ய தூண்டுகிறார்கள். அதிக பணத்தை முதலீடு செய்த பின்னர் லாப தொகையும், முதலீடு தொகையும் கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள். இதுபோன்ற மோசடி ஆசாமிகளின் இணையதள முகவரிக்குள் சென்றாலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தொழில்நுட்ப மாறுபாடுகளை செய்துள்ளனர்.

சமீபத்தில் திருப்பூரில் இதுபோன்ற மோசடிகளில் படித்த இளைஞர்கள் தான் அதிகம் சிக்கி வருகிறார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மோசடி ஆசாமிகள் விரிக்கும் வலையில் சிக்கிவிடுகிறார்கள்’ என்றார்.திருப்பூர், நவ.23- திருப்பூரை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஐ.டி.துறையில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் இவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்து எளிய முறையில் பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பிய அந்த இளம்பெண் குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்ட டெலகிராம் செயலிக்குள் சென்று பார்த்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாலோ செய்தால் உங்களுக்கு கமிஷனாக பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி அவ்வாறே அந்த இளம்பெண் செய்துள்ளார்.

இவ்வாறு செய்ததன் மூலம் அவருக்கு கொஞ்சம் பணம் கிடைத்துள்ளது. பின்னர் அவருக்கு பண ஆசை மேலும் அதிகரித்தது. அதன்பிறகு ஒவ்வொரு போட்டியாக வைத்து அதில் வெற்றி பெற்றால் உங்களுக்கு கிடைக்கும் பணத்தொகை இவ்வளவு என்று அதிகப்படியான பணத்தை காட்டி இளம்பெண்ணுக்கு ஆசையை தூண்டியுள்ளனர். மேலும் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதன் மூலமாக கிடைக்கும் லாபத்தொகையை காட்டியுள்ளனர்.

இதனால் அதிக பணம் சம்பாதிக்கும் எண்ணம் அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட, ஒரு கட்டத்தில் வங்கியில் கடன் வாங்கி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார். இவ்வாறு ரூ.17 லட்சத்து 76 ஆயிரத்து 800-ஐ அந்த இளம்பெண் முதலீடு செய்தார். அதற்காக கிரிப்டோ கரன்சி தொகையும் கணக்கில் வந்துள்ளது. ஆனால் லாபத்தொகை, முதலீடு தொகை உள்ளிட்ட எந்த பணத்தையும் இளம்பெண்ணால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவருக்கு தெரியவந்தது, பணத்தாசையில் ஏமாறப்பட்டோம் என்று.

இதைத்தொடர்ந்து அந்த பெண் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவுப்படி திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி கூறும்போது, ஐ.டி., பொறியியல் பட்டதாரிகள் தான் இதுபோன்ற மோசடிகளில் அதிகம் சிக்குகிறார்கள். முதலில் கொஞ்சம் பணத்தை சம்பாதிப்பது போல் அனுப்பி வைக்கிறார்கள்.

அதன்பிறகு ஒவ்வொரு டாஸ்க் வைத்து பணத்தை அதிகம் முதலீடு செய்ய தூண்டுகிறார்கள். அதிக பணத்தை முதலீடு செய்த பின்னர் லாப தொகையும், முதலீடு தொகையும் கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள். இதுபோன்ற மோசடி ஆசாமிகளின் இணையதள முகவரிக்குள் சென்றாலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தொழில்நுட்ப மாறுபாடுகளை செய்துள்ளனர். சமீபத்தில் திருப்பூரில் இதுபோன்ற மோசடிகளில் படித்த இளைஞர்கள் தான் அதிகம் சிக்கி வருகிறார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மோசடி ஆசாமிகள் விரிக்கும் வலையில் சிக்கிவிடுகிறார்கள்’ என்றார்.

Related Post

தேனி அருகே நாக்கு, மூளை, கல்லீரலை பார்சலில் கடத்திய கும்பல்- நரபலி கொடுக்கப்பட்டதா? என விசாரணை

Posted by - August 4, 2023 0
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய பைாபஸ் சாலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நள்ளிரவு…

பிரமாண்டமான தனி விமானம் வாங்கிய நடிகர் சூர்யா.. இதன் விலை எத்தனை கோடி தெரியுமா

Posted by - August 23, 2024 0
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவா…

கோவில்களுக்குள் செல்போன், கேமராக்கள் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது- அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - September 2, 2023 0
சென்னை: பழனி தண்டாயுதபாணி கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒரு படம் சமூக வலைதளங்களில் உலாவி வருவதாக சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த…

தேர்தலுக்கு பின் கழகத்திலும் அரசியலிலும் பல மாற்றங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

Posted by - February 23, 2024 0
பிப்ரவரி 26ஆம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடுவீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜகவின் அநீதிகளை மக்களிடம் கொண்டு…

நடைபயிற்சி சென்ற பெண்ணை கட்டையால் தாக்கி தரதரவென இழுத்து சென்ற கொள்ளையன்

Posted by - March 16, 2023 0
நடைப்பயிற்சி சென்ற பெண் பேராசிரியரை தாக்கி, அவரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *