பருவமழை தீவிரம்: தமிழகத்தில் மேலும் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

269 0

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. உள்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரளப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை செய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது.தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி..! 17 மாவட்டங்களுக்கு கன மழை  எச்சரிக்கை- வானிலை மையம்
இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இன்று ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடல் பகுதியை நோக்கி நகர்ந்தால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். அது எந்த திசைநோக்கி நகரும் என்பதை பொறுத்து தான் தமிழகத்தில் கனமழை வாய்ப்பை கணக்கிட முடியும். புதிய புயல் சின்னம் சென்னை அருகே மையம் கொண்டால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், புதுச்சேரியில் மிக கனமழையை எதிர்பார்க்கலாம். எனவே அடுத்து வரும் நாட்களில் பருவமழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது.

Related Post

மாதம்பட்டி ரங்கராஜ் யார் என்று தெரியுமா?- அழகிய குடும்ப போட்டோ

Posted by - May 2, 2024 0
குக் வித் கோமாளி 5 தொழில் வளர்ச்சி என்பது அனைவருக்குமே எடுத்தவுடன் வெற்றி தராது, அதற்காக நிறைய முயற்சி, உழைப்பை போட வேண்டும். அப்படி ஆரம்பத்தில் இருந்து…

சிவாஜி ராவ் டூ சூப்பர் ஸ்டார்.. தமிழகம் கொண்டாடும் ரஜினிகாந்த்.. பிறந்தநாள் ஸ்பெஷல்!

Posted by - December 12, 2022 0
Rajinikanth Birth Day: ரஜினிகாந்த் கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழையும் அந்த முதல் காட்சி தமிழ் திரையுலக ரசிகர்கள் மனதின் திறவுகோலாகவும் அமைந்தது. 73 வது வயதில்…

மருதாணி.. செக்கச்சிவந்த மருதாணி.. ஆமா, மருதாணி வெச்சதுமே, கைகள் சிவப்பு கலரா மாறிடுதே.. ஏன் தெரியுமா

Posted by - November 3, 2023 0
சென்னை: அழகுக்காக மட்டுமே நினைத்து, பலரால் ஒதுக்கப்படுவது மருதாணி.. உண்மையை சொல்லப்போனால், இந்த மூலிகையின் அற்புத பலன்களை பட்டிலியட்டு சொல்ல முடியாது. அந்த அளவுக்கு நீளும் நன்மைகளை,…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்

Posted by - July 28, 2025 0
சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக…

பணிநேரம் முடியும்வரை ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு

Posted by - March 29, 2023 0
விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *