குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று காலை முதல் அனுமதி- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

308 0

தென்காசி:

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுவது தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் ஆகும். தென்மேற்கு பருவமழை காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

ஆனால் இந்த ஆண்டிற்கான சீசன் தொடங்குதில் தாமதம் ஏற்பட்டது. கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. தென்காசியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் வறட்சியுடன் காணப்பட்ட ஐந்தருவி மற்றும் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத் தொடங்கியது.வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க  அனுமதி | Tourists allowed bath in Courtallam Falls

நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடனும், இதமான காற்றும் வீசி வந்த நிலையில் மாலை 4 மணிக்கு திடீரென மேகக் கூட்டங்கள் திரண்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் குற்றாலம், தென்காசி பகுதியில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. இதேபோல் செங்கோட்டை, குண்டாறு, அடவிநயினார் அணைப்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

இதனால் குற்றாலம் ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டியும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க உடனடியாக தடை விதிக்கப்பட்டது.

இரவில் மழைப்பொழிவு குறைந்ததை அடுத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கும் குறைந்தது. இதனால் இன்று காலை முதல் ஐந்தருவி, மெயின் அருவியில் சீராக தண்ணீர் விழ தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. குற்றால சீசன் எப்பொழுது தொடங்கும் என எதிர்பார்த்து இருந்த சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் ஆர்வமுடன் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குவிந்து வருகின்றனர்.

அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். எனினும் பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றுருவி பகுதிகள் வறட்சியுடனே காணப்பட்டு வருகிறது. இன்று காலை முதல் குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்று தொடர்ந்து வீசி வருவதால் தொடர்ந்து சாரல் மழை பெய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றும் தொடர் சாரல் மழை பெய்தால் சிற்றுருவி, புலி அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

தமிழ் புத்தாண்டு 2023… செய்ய வேண்டியவைகளும் செய்யக் கூடாதவைகளும்..!

Posted by - April 12, 2023 0
அசைவம் சாப்பிடுவது, நகம் வெட்டுவது, முகச் சவரம் செய்வது, முடி வெட்டுவது போன்ற செயல்களை இந்நாளில் கட்டாயம் செய்யவே கூடாது. சித்திரை மாத முதல் நாளை உலகத்…

சதுரங்கவேட்டை சினிமா பாணியில் இரிடியம் கண்டுபிடிக்கும் ‘ரைஸ் புல்லிங் எந்திரம்’ என கூறி மோசடி-2 பேர் கைது

Posted by - August 2, 2023 0
வந்தவாசி: விழுப்புரம் மாவட்டம் நாப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர்கணேஷ். வியாபாரியான இவர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடனாளி ஆனார். இதையடுத்து நண்பர் மூலமாக ரைஸ் புல்லிங் எந்திரம் வாங்கி…

உங்கள் BSNL 4G சிம் கார்டில் VoLTE சேவையை எவ்வாறு செயல்படுத்துவது? இதோ வழிமுறைகள்..

Posted by - December 3, 2024 0
தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம். அதாவது 4ஜி சேவை, 5ஜி சோதனை, லைவ் டிவி…

போதைப் பழக்கமே குற்றங்களை எளிமையாக்குகிறது – இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை

Posted by - March 9, 2024 0
நாட்டில் நடக்கும் பாதி குற்றங்களுக்கு காரணம் போதை பழக்கம் தான் என்றும் குற்றங்களை எளிமையாக செய்ய போதை ஒரு ஆயுதமாக இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஊர்வசி…

“இந்த முறை வேறு தொகுதி..” – உதயநிதி தொகுதி மாறுகிறாரா? 2026 தேர்தல் குறித்து கொடுத்த ஹின்ட்!

Posted by - January 10, 2025 0
திமுக ஆட்சியில் முதலமைச்சர் நிச்சயமாக எந்தவொரு குற்றவாளியையும் தப்பிக்கவிடமாட்டார் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 200 கூட்டணி தொகுதிகளில் வெற்றிபெறும் என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *