“இந்த முறை வேறு தொகுதி..” – உதயநிதி தொகுதி மாறுகிறாரா? 2026 தேர்தல் குறித்து கொடுத்த ஹின்ட்!

146 0

திமுக ஆட்சியில் முதலமைச்சர் நிச்சயமாக எந்தவொரு குற்றவாளியையும் தப்பிக்கவிடமாட்டார் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 200 கூட்டணி தொகுதிகளில் வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பாக பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியில் யாரை நிறுத்தினாலும் வெற்றிபெற வைக்க வேண்டும் என்றார்.

அப்போது, “சேப்பாக்கத்தில் இந்த முறை வெற்றி அதிகமான வாக்கு வித்தியாசத்தில் இருக்க வேண்டும். யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் சரி நீங்கள் வெற்றிபெற வைக்க வேண்டும். இந்தமுறை தலைவர் என்னை வேறு தொகுதிக்கு மாற்றினாலும் மாற்றலாம்.” என்று கூறினார். அப்போது திமுக தொண்டர்கள் வேறு தொகுதி வேண்டாம் என்றும் சேப்பாக்கம் தொகுதியில் தொடர்ந்து நிற்க வேண்டும் என்றும் கூச்சலிட்டனர்.தொடர்ந்து பேசிய உதயநிதி, திமுக ஆட்சியில் முதலமைச்சர் நிச்சயமாக எந்தவொரு குற்றவாளியையும் தப்பிக்கவிடமாட்டார் எனவும் தெரிவித்தார். “அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது உண்மையில் வருந்தத்தக்க சம்பவம் தான். ஆனால், அதற்கு முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். சம்பவம் நடந்த 4 மணிநேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.” என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதிக்கப்பட்டபோதும் பல மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் துணை முதல்வர் குற்றஞ்சாட்டினார்.

Related Post

dmk tvk 1

Udhayanidhi: ” ரீல்ஸ் ஆட்சியா? உதயநிதியை ரவுண்டு கட்டிய தவெக பாய்ஸ்

Posted by - May 14, 2026 0
Udhayanidhi DMK Vs TVK: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை ரீல்ஸ் ஆட்சி என குறிப்பிட்ட உதயநிதிக்கு பதிலடி தரும் விதமாக, சமூக வலைதளங்களில் திமுகவின் விளம்பரங்களை…

Christmas 2025: இந்தியா முழுவதும் கொண்டாட்ட வேகம்… சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் ஸ்பெஷல் Events!

Posted by - December 12, 2025 0
சென்னை: உலகம் முழுவதும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் Christmas 2025 கொண்டாட்டங்கள் பெரிய கொண்டாட்டத்தோடு இன்று ஆரம்பமானது. தமிழ் நாடு முழுவதும் தேவாலயங்கள், மால்கள், கடைகள், சுற்றுலா…

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின்

Posted by - December 8, 2025 0
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கோயில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். சீர்காழி அருகே திருவெண்காட்டில் இந்துசமய…

“ராகுல் எம்.பி பதவி பறிப்பை திருமாவளவன் நினைவில் கொள்ள வேண்டும்…”- பாமக வழக்கறிஞர் பாலு பேட்டி..!

Posted by - June 12, 2023 0
அரசியல் கட்சித் தலைவர் எப்படி பேசக் கூடாது என்பதற்கு முன் உதாரணமாக திருமாவளவன் இருப்பதாக பாமக வழக்கறிஞர் பாலு விமர்சனம். நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம், சிதம்பரத்தில் மீண்டும் போட்டியிட…

அமுக்கிரா கிழங்கு.. ஊளைச்சதை முதல் நரம்பு தளர்ச்சிவரை நீக்கும் அமுக்கிரான் கிழங்கு பொடி.. செம மூலிகை

Posted by - January 9, 2024 0
சென்னை: நரம்புகளை பலப்படுத்துவது முதல் முதுமையில் ஏற்படும் பிரச்சனைகளை விரட்டுவதுவரை பயன்படக்கூடியது அமுக்கிரா கிழங்கு.. அதனால்தான், சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த கிழங்குக்கெனவே தனி இடம் உள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *