Generated Image January 10 2026 4 18PM

குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் பரிசு..

152 0

குழந்தை இல்லாத  ஒரு பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் வரை வெகுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இலவச பாலியல் உறவு மற்றும் பணம் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் பல்வேறு ஆண்களும் ஆர்வம் காட்டினர்.

பீகார் மாநிலத்தில் குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் கிடைக்கும் என விளம்பரம் செய்து ஆண்களிடம் மிகப்பெரிய அளவில் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட நிலையில் நாளுக்கு நாள் பல்வேறு வகையில் மோசடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் விசித்திரமான முறையில் மோசடி நடைபெற்றுள்ளது. அங்கு நவாடா நகரில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ‘அகில இந்திய கர்ப்பிணி வேலை’ என்ற பெயரில் ஆன்லைன் விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதில் குழந்தை இல்லாத  ஒரு பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் வரை வெகுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இலவச  பாலியல் உறவு மற்றும் பணம் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் பல்வேறு ஆண்களும் இதில் கலந்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

காரணம், இந்த விஷயத்தில் கலந்து கொள்ளும் நீங்கள்  தோல்வியடைந்தாலும், பாதி பணம்   கிடைக்கும் என்று அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. இதற்காக ஒரு குறிப்பிட்டத்தக்க தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு பெண் மாடல்களின் புகைப்படங்கள் அனுப்பப்பட்டு மேலும் ஆசையை அந்த கும்பல் தூண்டியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பதிவு கட்டணம், ஹோட்டல் கட்டணங்கள் போன்றவற்றுக்கு ஆரம்ப கட்டணங்களை இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களிடம் பல்வேறு முறைகளில் வசூலிக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்தை ஈஸியாக பெறலாம் என நம்பி பலரும் பணத்தை செலுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் தங்களிடம் இருந்த பணம் கரைந்ததை உணர்ந்த ஆண்கள், தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறையினரை அணுகினால் வீணாக நம்முடைய பெயர் அல்லது குடும்பத்தினருக்கு களங்கம் ஏற்படலாம் என்பதால் யாரிடமும் வாயை திறக்காமல் இருந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் சென்ற நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில் நவாடாவைச் சேர்ந்த ரஞ்சன் குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடியில் நான்கு மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டது. பணம் மற்றும் பாலியல் தேடும் அனைத்து வயது ஆண்களையும் கவர்ந்திழுக்கும் ஒரு கும்பல் நவாடா மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் திமான் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக ஊடகங்களில் வரும் இதுபோன்ற கவர்ச்சிகரமான மற்றும் நம்ப முடியாத கூற்றுகளை நம்ப வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த குற்றத்தில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Related Post

மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு

Posted by - September 28, 2023 0
இம்பால்: மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில…
Generated Image November 24 2025 10 39AM

கியூஆர் கோடு, புகைப்படத்துடன் புதிய ஆதார் அட்டை!

Posted by - November 24, 2025 0
புதுடெல்லி: ஆ​தார் அட்டை தவறாக பயன்​படுத்​தப்​படு​வதை தடுக்க வரும் டிசம்​பரில் புதிய விதி​​களை அமல்​படுத்த இந்​திய தனித்​துவ அடை​யாள ஆணை​யம் (யுஐடிஏஐ) திட்​ட​மிட்டுள்​ளது. இதன்​படி வருங்​காலத்​தில் ஆதார் அட்​டை​யில்…

சலுகைனா இதான்.. ரூ. 6000 விலைக்கு Smart TV..

Posted by - December 21, 2024 0
உங்கள் வீட்டிற்கு புதிதாக ஸ்மார்ட் டிவி (Smart TV) வாங்கும் ஐடியா இருக்கிறதா? அப்படியானால் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தற்போது நடைபெறும் பிக் சேவிங் டே சேல்ஸ்…

”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

Posted by - December 11, 2024 0
Paracetamol: பாராசிட்டமால் மாத்திரைகள் தரமானதாக இல்லை என, மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடிக்கடி பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் தொடர்பான அரசின் தகவல் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ”பாராசிட்டமால்…

உலகின் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் உள்ளன: ஆய்வறிக்கையில் தகவல்

Posted by - March 14, 2023 0
புதுடெல்லி: உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலை சுவிட்சர்லாந்தின ஐக்யுஏர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 131 நாடுகளில், 30,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *