கோடை காலத்தில் இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுங்க.. ஈசியா சமாளிச்சிடலாம்..!

347 0

கோடைக் காலத்தில் அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என பல தொல்லைகளிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என  மருத்துவர் கூறும் விளக்கங்களை பார்க்கலாம்.

கோடைக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வெயில் நம்மை மிரட்டத் தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என்று பல தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும். இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி? பல விளக்கங்களை அளித்துள்ளார் பொது மருத்துவர் டாக்டர் பிரியா பத்மாசினி..

முதலில் கோடை காலத்தில் முடிந்த அளவுக்கு அதிகமான தண்ணீரை குடிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை குடித்தாலே நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அதன் பிறகு வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளை ஈடுசெய்வதற்காக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர், தர்பூசணி, எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாற்றை அருந்த வேண்டும்.முடிந்த அளவிற்கு நீர் சத்துக்கள் நார்ச்சத்துக்கள் நிறைந்த புடலங்காய், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் வெண்டைக்காய், தர்பூசணி பழங்கள் சாத்துக்குடி, திராட்சை போன்ற காய்கறிகள், பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மாம்பழம், பப்பாளி பழம் தேவைக்கேற்ப சாப்பிட வேண்டும். பொதுமக்கள் முடிந்த அளவிற்கு உச்சி வெயிலில் செல்ல வேண்டாம். அப்படி சென்றால் சிறுநீரக கோளாறு சிறுநீரக பிரச்சனை சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இந்த பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு முடிந்த அளவிற்கு அதிக தண்ணீரை குடிக்க வேண்டும். வீட்டிலேயே உப்பு கரைசல் (ORS) செய்து குடிக்கலாம். தங்கள் உடல் நலம் கருதி தேவைக்கேற்ப தலையில் எண்ணெய் வைத்து குளிக்கலாம். குறிப்பாக வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.கோடைகாலத்தில் முடிந்த அளவிற்கு பருத்தி ஆடைகளே அணிவது சிறந்த வழிமுறையாகும். அவற்றில்கூட இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம். மேலும் வெயில் காலத்தில் வெளியில் முகத்தில் சன்ஸ்கிரீன் போடுவது, குடையை பயன்படுத்துவது சிறந்த பழக்கமாகும் என பல அறிவுரைகளை டாக்டர் பத்மாசினி பொதுமக்களுக்கு வழங்கினார்.

Related Post

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அக்ஷ்யா மற்றும் பிராவோ வாங்கிய சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

Posted by - November 28, 2023 0
பிக்பாஸ் 7 விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் 7. கடந்த அக்டோபர் 1ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கிய இந்நிகழ்ச்சி 50…

பச்சோந்தி இனியா.. பாக்கியலட்சுமி புது ப்ரோமோ பார்த்து வெச்சி செய்யும் நெட்டிசன்கள்

Posted by - July 22, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் பாக்யா பணத்தை ரெடி செய்து கோபி மற்றும் ராதிகாவை வீட்டை விட்டு அனுப்பிய…

இந்த 5 ராசிக்காரங்க அசைக்க முடியாத மனவலிமை உள்ளவங்க… இது மற்றவர்களை விட அவர்களுக்கு வலிமையைக் கொடுக்கும் ஒன்றாகும்

Posted by - January 27, 2023 0
நமது மனமே நமது மிகப்பெரிய ஆயுதம். பெரும்பாலான மக்களுக்கு அதை எவ்வாறு புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது என்பது தெரியும், மற்றவர்கள் அதைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மனதளவில் வலுவாக…

விவாகரத்து கேட்ட கதிருக்கு ஷாக் கொடுத்த நந்தினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ

Posted by - January 22, 2026 0
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தொடர்ந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. வீட்டுக்குள் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கும் கதிர் மற்றும் ஞானம் இருவரும் பிரச்னையை தொடங்கி பெண்களுக்கு…

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 3, 2023 வெள்ளிக்கிழமை❤️

Posted by - March 3, 2023 0
இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 3, 2023 வெள்ளிக்கிழமை❤️ மேஷம்✅ பங்கு முதலீட்டில் லாபம் பெறுவீர்கள். கட்டுமானத் துறையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவீர்கள். உறவினர்கள் வீடு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *