“சனிக் கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தத் திட்டம்…” – அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்..!

327 0

பள்ளிகளை தாமதமாக திறப்பதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்.

சனிக்கிழமைகளில் பள்ளிகளின் வேலை நாட்களாக செயல்பட திட்டமிட்டுள்ளோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை செயின்ட் தாமஸ் மௌண்டில் உள்ள மான் ஃபோர்டு மெட்ரிகுலேஷன் பள்ளியில் தகரி சிலம்பாட்ட கழகம் நடத்தும் 2ஆம் ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில சிலம்ப போட்டியினை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி, சிலம்பாட்டம் என்பது தமிழ் இனத்தின் கலாச்சாரம் பண்பாடு நாம் அறிந்த ஒன்று தான். மேலும் இது போன்ற போட்டிகள் அழிந்து விடாமல் இருப்பதற்கு இந்த அமைப்புகள் நடத்துவதற்கு நன்றி  என்றார்.மேலும் தொடர்ந்து பேசிய அவர் 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள் தான் பணியமர்த்தப்படுகிறார்கள் மேலும் பள்ளிகள் தாமதமாக திறப்பதால் பாடத்திட்டத்தை முழுமையாக முடிப்பதற்கு பாதிப்பு ஏற்படாதா செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்,   “பள்ளிகளை தாமதமாக திறப்பதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. மாணவர்களுக்கு பாட சுமை ஏற்படாத வகையிலும், ஆசிரியர்களுக்கு பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமைகளில் பள்ளிகளின் வேலை நாட்களாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

Related Post

டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது…

Posted by - March 17, 2025 0
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக இன்று பாஜகவினர் போராட்டம் நடத்தும் நிலையில், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை…

க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்க? இந்த பொருளோடு சேர்ந்து குடிச்சா உங்க ஆரோக்கியம் செமையா இருக்குமாம்

Posted by - December 25, 2023 0
கோவிட்-19 வகை JN.1 இன் புதிய திரிபு உடல்நலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது, மேலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை…

பெண்களை சூப்பர்வுமனாக மாற்ற இந்த 5 சூப்பர் உணவுகளை அவங்க உணவில் அவசியம் சேர்த்துக்கணுமாம்…!

Posted by - December 22, 2023 0
பெண்கள் பெரும்பாலும் அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகளின் சுமையால் தங்கள் சொந்த ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. அதனால் படிப்படியாக, அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள், இதன் காரணமாக,…

காதல் திருமணம் செய்த 2-வது நாளில் தாலியை கழற்றி கொடுத்து விட்டு உறவினர்களுடன் சென்ற இளம்பெண்

Posted by - July 4, 2023 0
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் அருண் சக்ரவர்த்தி (வயது 28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.…

எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

Posted by - September 8, 2023 0
நடிகர் மாரிமுத்து #actormarimuthu #ethirneechal #tamilserial #suntv #rip #jailer சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *