சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்

161 0

சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக முதல்​வருமான மு.க.ஸ்​டா​லின் கடந்த 21-ம் தேதி காலை​யில் வழக்​க​மான நடைப​யிற்சி மேற்​கொண்ட போது அவருக்கு லேசான தலைச் சுற்​றல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, காலை 10.50 மணி​யள​வில் அவர் சென்னை ஆயிரம்​விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலை​யில் உள்ள அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

அங்கு அவருக்கு பல்​வேறு மருத்​துவ பரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. கடந்த 24-ம் தேதி மேற்​கொள்​ளப்​பட்ட கூடு​தல் பரிசோதனை​யில் அவருடை தலைசுற்​றல் பிரச்​சினைக்​கு, அவரது இதய துடிப்பு சீரற்று இருந்​ததே காரணம் என்​பது தெரிய​வந்​தது. இதய இடை​யீட்டு சிகிச்சை நிபுணர் ஜி.செங்​கோட்​டு​வேலு தலை​மையி​லான மருத்​து​வர் குழு​வினர் முதல்​வருக்கு இதய துடிப்பை சீராக்​கு​வதற்​கான சிகிச்​சையை மேற்​கொண்​டனர்.தொடர்ந்து மேற்​கொள்​ளப்​பட்ட ஆஞ்​சியோ பரிசோதனை​யில் வேறு எந்த பாதிப்​பும் இல்லை என்​பது உறு​தி​யானது. முதல்​வரின் உடல்​நிலையை மருத்​து​வர்​கள் தொடர்ந்து கண்​காணித்து வந்​தனர். மருத்​து​வ​மனை​யில் இருந்​த​வாறு அரசு அலு​வல்​களை முதல்​வர் மேற்​கொண்டு வந்​தார்.இந்​நிலை​யில், நேற்று மாலை சுமார் 6 மணி​யள​வில் மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் டிஸ்​சார்ஜ் செய்​யப்​பட்​டார். மருத்​து​வ​மனை வளாகத்​தில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர் துரை​முரு​கன் உள்​ளிட்ட பலர் முதல்​வரை வரவேற்​றனர். மருத்​து​வ​மனை​யில் இருந்து தேனாம்​பேட்டை சித்​தரஞ்​சன் சாலையில் உள்ள இல்​லத்​துக்​குச் சென்ற முதல்​வரை, சாலை​யின் இரு​புற​மும் திரண்டு இருந்த பொது​மக்​கள், கட்​சி​யினர் வரவேற்​றனர்.

இதைத்தொடர்ந்து முதல்​வர் ஸ்​டா​லின் வெளியிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வு: நலம் பெற்று வீடு திரும்​பினேன். மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டிருந்த போது அக்​கறை​யுடன் விசா​ரித்​து, நலம் பெற வாழ்த்​திய அனைத்து அரசி​யல் இயக்க தலை​வர்​கள், மக்​கள் பிர​தி​நி​தி​கள், நீதிப​தி​கள், அரசு அதி​காரி​கள், திரை கலைஞர்​கள் என் உயிரோடு கலந்​திருக்​கும் அன்பு உடன்​பிறப்​பு​கள் உள்​ளிட்ட தமிழக மக்​கள் அனை​வருக்​கும் எனது நெஞ்​சார்ந்த நன்​றி.

மருத்​து​வ​மனை​யில் சிறப்​பான சிகிச்சை அளித்​து, நான் விரைந்து நலம்​பெற உறு​துணை​யாய் இருந்த மருத்​து​வர்​கள் மற்​றும் செவிலியர்​கள் உள்​ளிட்ட அனை​வருக்​கும் மீண்​டும் அன்​பும், நன்​றி​யும். உங்​களுக்​காக உழைப்பை வழங்​கும் என் கடமையை என்​றும் தொடர்​வேன். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்.

முன்​ன​தாக, அப்​போலோ மருத்​து​வ​மனை மருத்​துவ சேவை​கள் இயக்​குநர் மருத்​து​வர் பி.ஜி.அனில் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், “மருத்​து​வர் செங்​குட்​டு​வேலு தலை​மையி​லான மருத்​து​வர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழு​மை​யாக குணமடைந்த முதல்​வர் இல்​லம் திரும்​பு​கிறார். முதல்​வர் நலமாக இருக்​கிறார். 3 நாள் இடைவெளிக்கு பின்​னர் வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது” என்​று தெரிவித்​துள்​ளார்.

Related Post

உஷார்… டெங்கு காய்ச்சலின் இந்த 4 அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க..

Posted by - September 14, 2023 0
டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகளை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் இது வெறும் காய்ச்சலாக மட்டுமல்லாமல், இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே…

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: திண்டுக்கல், தென்காசியில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை!

Posted by - August 20, 2025 0
சென்னை: திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்பட 10 இடங்களில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.…

மக்களே எச்சரிக்கை..! அதிகரிக்கும் மர்ம காய்ச்சல்… இது கொரோனா வேரியன்டா?…

Posted by - March 6, 2023 0
H3N2 influenza Virus | வேகமாகப் பரவி வரும் H3N2 இன்ஃப்ளூயன்ஸாவிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள, கூட்டத்தைத் தவிர்ப்பது மற்றும் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற சில…

அடுத்த ரவுண்டுக்கு ரெடியா.. புயல்? உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழை கன்ஃபார்ம்

Posted by - October 22, 2025 0
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமான வலுவடையக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வடமாவட்டங்களில்…

ஏழைகளின் தலையில் இடி! ரிசர்வ் வங்கி நகைக்கடன் விதிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேசம்

Posted by - May 22, 2025 0
தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *