“சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை, எங்கே போனார் அப்பா.?“

148 0

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு திருவாரூரில் பேசியபோது, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்ற தலைப்பில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில், மக்களிடையே உரையாற்றினார். அப்போது, தமிழ்நாட்டில் சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குற்றம்சாட்டினார்.

“பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா.?“

நன்னிலம் பேருந்து நிலையத்தில் கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு உங்கள் அரசு, அது உங்கள் கட்சி, அதிமுக நன்னை செய்யும் கட்சி என்று கூறிய அவர், திமுக கொள்ளையடிக்கும் கட்சி என்று விமர்சித்தார்.

மேலும், தற்போது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், போதைப் பொருள், கஞ்சா இல்லாத இடமே இல்லை என்றும் கூறினார். அதோடு, திருவள்ளூர் சிறுமி தூக்கிச் செலலப்பட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டிய அவர், பள்ளி சிறுமியை போதை ஆசாமி தூக்கிக்கொண்டு போகிறான், குற்றவாளிக்கு அச்சம் இலலை என்று தெரிவித்தார்.

சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை என்றும், அப்பா என்று சொல்கிறார்(ஸ்டாலின்), பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா.? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், அப்பா என்று சொன்னால் மட்டும் போதுமா.? இதுவரை அவனை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

“நான் பொய் செல்கிறேனா.? உண்மையை தான் பேசுகிறேன்“

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நான் வேண்டுமென்றே வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்கிறேன் என்கிறார்(ஸ்டாலின்), நான் பொய் சொல்கிறேனா என்று மக்களிடம் கேள்வி எழுப்பிய அவர், உண்மைதான் பேசுகிறேன் என்று கூறினார்.

நாங்கள் மீண்டும் நல்லாட்சியை கொடுப்போம் என்று கூறிய இபிஎஸ், நன்னிலம் தொகுதியில் நிறைய திட்டங்களை அதிமுக ஆட்சியின்போது கொடுத்திருப்பதாக தெரிவித்தார். நன்னிலம், குடவாசல் அரசு கலைக்கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி, பேருந்து நிலையம், தூர் வாரும் பணிகள், நெல் சேமிப்பு கிடங்குகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், பாலங்கள் என அப்பகுதிக்கு நிறைய கொடுத்திருப்பதாகவும், ஆனால் அது எதுவும் முதலமைச்சருக்கு தெரியாது என்றும் விமர்சித்தார்.

புதிய ஊராட்சி ஒன்றிய, தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை தரம் உயர்த்துதல், நன்னிலம் உணவு பதப்படுத்தும் பூங்கா, அரிசி ஆலை, புறவழிச் சாலை என நிறைய கோரிக்கைகள் வைத்துள்ளீர்கள், அவற்றை அதிமுக ஆட்சி அமைந்ததும் செய்துகொடுப்போம் என்றும் மக்களிடம் உறுதி அளித்தார் எடப்பாடி பழனிசாமி.

இறுதியாக, அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கப்போவதாகவும், திமுக மிரண்டு ஓடப்போவதாகவும் கூறிய அவர், மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம், பை பை ஸ்டாலின் என்று சூளுரைத்தார்.

Related Post

டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை

Posted by - September 17, 2025 0
சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்…

பொது சொத்துக்கள் சேதம்! ”சட்டம் தன் கடமையை செய்யும்”அமைச்சர் ரகுபதி விஜய்க்கு பதிலடி

Posted by - September 15, 2025 0
“விஜய்யின் வருகையால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்க எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. தவெக விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர்…

விஜய் வரணும்.. குஷிப்படுத்த பாஜககாரங்க பேசிக்கிறாங்க, அதிமுகவில் சீமான்? – எடப்பாடி பேச்சு

Posted by - July 22, 2025 0
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய விஜயின் தவெக மற்றும் சீமான் ஆகியோருக்கு, எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். தொண்டர்களை குஷிப்படுத்த ஆட்சியில் பங்கு என, பாஜகவினர் பேசி…

திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு

Posted by - March 27, 2026 0
திருச்சி இரண்டாவது தலைநகரமாக மாற்றும் அறிவிப்பு திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தகவல். திருச்சி: திமுகவின் தேர்தல் அறிக்கையில் திருச்சியை 2வது தலைநகராக்கும் அல்லது துணை தலைநகராக மாற்றும்…

மதுரை தவெக மாநாட்டில் விஜய் உடைக்கும் சீக்ரெட்! போட்டியிடும் தொகுதி பற்றி அறிவிக்க வாய்ப்பு!

Posted by - August 21, 2025 0
மதுரை: மதுரையில் இன்று தவெக மாநாடு (TVK Maanadu Madurai) நடைபெறுகிறது. மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த மாநாட்டில் விஜய் மாலை 6 மணியளவில் பேசுவார் என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *