சூரியனை நோக்கி ஆதித்யா எல்-1 விண்கலம்: பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

223 0

புதுடெல்லி:

சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகிறது. இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.சூரியனை நோக்கி ஆதித்யா எல் விண்கலம்1.. PSLV-C57 ராக்கெட் ரெடி!  புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ | ISRO has released photos of the Aditya L1  space probe to study the Sun - Tamil Oneindia

பூமியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு குறிப்பாக, சூரியனை நோக்கிய கோணத்தில் நிறுத்தப்படுகிறது. இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய இருக்கிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து, ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்

Related Post

இந்தியாவின் UPI இனிமேல் பிரான்ஸில் பயன்படுத்தலாம்: பிரதமர் மோடி தகவல்

Posted by - July 14, 2023 0
இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி இந்திய நேரப்படி நேற்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான், பிரதமர் எலிசபெத்…

1½ நிமிடங்களில் முடிந்தது கருவில் உள்ள குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை- டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் சாதனை

Posted by - March 15, 2023 0
புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 28 வயதான கர்ப்பிணி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே மூன்று முறை கரு கலைந்திருந்தது. 4-வது முறையாக கர்ப்பம் அடைந்த…

ஜார்க்கண்டில் 8 பஸ்கள் அடுத்தடுத்து எரிந்ததால் பரபரப்பு

Posted by - June 30, 2023 0
ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள கட்கர்கா பகுதியில் தனியார் பஸ் நிறுத்துமிடம் உள்ளது. தொலைதூரங்களுக்குச் செல்லும் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டு வருகின்றன.…

இந்திய பெருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது: ஐ.நா. தகவல்

Posted by - January 6, 2024 0
2023-ம் ஆண்டில் உலகளாவிய சவால்களை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு, உலகின் அதிவேக வளர்ச்சி விகிதத்துடன் பொருளாதாரமாகத் தொடர்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி 2024-ல் 6.2 சதவீதமாக…

தளபதிக்கு “தல” கணமா? கடைசி வரை அஜித்திற்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்!

Posted by - January 15, 2025 0
துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித்திற்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவிக்காதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித்தின் அஜித்குமார் ரேஸிங்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *