Generated Image January 03 2026 12 13PM

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: பாமக, நாதக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு

127 0

சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் சென்​னை​யில் டிச.26 முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது.

8-வது நாளாக ஆசிரியர்கள் குடும்​பத்​தினருடன், சென்னை ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே சாலை​யில் அமர்ந்து நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்​த​போது ஏற்​பட்ட தள்​ளு​முள்​ளு​வில் சிலருக்கு காயம் ஏற்​பட்​டது.

போராட்​டம் குறித்து எஸ்​எஸ்​ டிஏ பொதுச்​செய​லா​ளர் ஜே.​ராபர்ட் கூறும்​போது, ‘‘ஒற்றை கோரிக்​கையை வலி​யுறுத்தி போராடி வரு​கிறோம். கடந்த தேர்​தலின்​போது எங்​கள் கோரிக்​கையை ஏற்ற திமுக, அதை தேர்​தல் வாக்​குறு​தி​யாக​வும் அறி​வித்​தது.

ஆனால், இது​வரை நிறைவேற்​ற​வில்​லை. ஊதிய முரண்​பாடு களை​யப்​ப​டா​விட்​டால், பள்​ளி​கள் திறந்​த ​பிறகும் போராட்​டம் தொடரும். தமிழக

அரசு எங்​களை அழைத்துப் பேசி கோரிக்​கையை நிறைவேற்ற வேண்​டும்’’ என்​றார்.

இதற்​கிடையே இடைநிலை ஆசிரியர் மீதான கைது நடவடிக்​கை​யைக் கண்​டித்​துள்​ளதோடு, அவர்​களது கோரிக்​கையை நிறைவேற்ற வேண்​டும் என பாமக தலை​வர் அன்​புமணி, நாம் தமிழர் ஒருங்​கிணைப்​பாளர் சீமான் மற்​றும் தமிழ்​நாடு உயர்​நிலை, மேல்​நிலைப்​பள்ளி பட்​ட​தாரி ஆசிரியர் கழகத்​தின் நிறு​வனர் அ.மாய​வன், தமிழ்​நாடு மேல்​நிலைப்​பள்ளி தொழிற்​கல்வி ஆசிரியர் கழகத்​தின் தலை​வர் செ.​நா.ஜ​னார்த்​தனன் உள்​ளிட்​டோர்​ வலி​யுறுத்​தி​யுள்​ளனர்​.

Related Post

evvelu

Cm Vijay vs EV Velu : முதல் ரெய்டே தோல்வியா.? லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எ.வ.வேலு வீட்டில் சிக்கியது என்ன.?

Posted by - June 26, 2026 0
E.V. Velu’s house DVAC Raid : முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் 40 லட்சம் ரூபாய் மற்றும்…

ரூ.1 கோடி நஷ்டஈடு தரணும்.. அமைச்சர் மனோ தங்கராஜுக்கு நோட்டீஸ் அனுப்பிய அண்ணாமலை!

Posted by - December 9, 2023 0
15 நாட்களில் மன்னிப்பு கேட்கவும், நஷ்ட ஈடு வழங்கவும் வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, தவறும் பட்சத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு…

செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டகளில் நில அதிர்வு – மக்கள் அதிர்ச்சி

Posted by - December 8, 2023 0
செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.39 மணி அளவில் ஏற்பட்ட…
Gemini Generated Image bj7m1ebj7m1ebj7m

நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்… அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்

Posted by - March 28, 2026 0
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும் திருமங்கை ஆழ்வாரால் 100 பாசுரங்கள் பாடப்பட்டு மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான கல்கருட தலமாக போற்றப்படும் தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…

எண்ணூர் அருகே வாயுக்கசிவு ஏற்பட்டு மூச்சுத்திணறல்: அச்சத்தால் கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்

Posted by - December 27, 2023 0
சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு துறைமுகத்தில் இருந்து அமோனியா திரவ வாயு கடலுக்கு அடியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *