தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் பரவும் புதிய வகை கொரோனா ஜே.என்.1.. பரபரக்கும் ஆய்வுகள்!

278 0

சென்னை:

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு புதுவகை கொரோனா ஜே.என்.1 உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தியாவில் ஜே.என். 1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது வேகமாக பரவி வந்தாலும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தாததால் பயப்பட தேவையில்லை என்கிறார்கள்.

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் பரவும் புதிய வகை கொரோனா ஜே.என்.1.. பரபரக்கும்  ஆய்வுகள்! | Do you know 4 districts of Tamilnadu is getting new variant of  Coronavirus? - Tamil Oneindia
அது போல் இந்த புதிய வகையான வைரஸ் தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்றும் தெரிவிக்கிறார்கள். இது கேரளாவில் பரவி வந்த நிலையில் இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 200க்கு மேல் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இத்தனை நாட்களாக ஜே.என். 1 வைரஸ் பரவல் இல்லை என சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது 4 பேருக்கு புதிய வகை கொரோன வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த 4 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு புனே பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டன. அவர்கள் 4 பேருக்கும் புது வகையான கொரோனா பரவியது தெரியவந்தது. அந்த 4 பேரும் மதுரை, திருவள்ளூர், கோவை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களாவர். இந்த வகை கொரோனா வீரியம் குறைந்தது. எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். காய்ச்சல், சளி, உடல்வலி போன்ற அறிகுறிகள் இந்த புதிய வகை கொரோனாவுக்கும் இருக்கும்.

கொரோனாவுக்கு அளிக்கும் சிகிச்சையே இந்த புதிய வகைக்கும் அளிக்கப்படுகிறது. மக்கள் கை கழுவுதல், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் , கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்தாலே நோய் தீவிரமாகாமல் தடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Related Post

ஓலா, ஊபர் போராட்டம் எதிரொலி: 20 கிலோமீட்டருக்கு ரூ.1000 கட்டணம் – பயணிகள் கடும் அதிர்ச்சி

Posted by - October 18, 2023 0
சென்னை: ஓலா, உபேர் டிரைவர்கள் நேற்று முன்தினம் முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை…

14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

Posted by - June 20, 2023 0
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்…

அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் – தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

Posted by - June 14, 2024 0
ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை நடைமுறையில் உள்ள,  பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் என்றும்…

+2 தேர்வு, பாஸ் ஆகலயா? உடனடி துணைத்தேர்வு, எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம் – அட்டவணை

Posted by - May 8, 2025 0
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள், உடனடியாக துணை தேர்வு எழுதுவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி…

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

Posted by - December 2, 2023 0
சென்னை: தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சமீபத்தில் உருவானது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *