டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?

148 0

முதலமைச்சர் ஸ்டாலினின் அண்மையில் டெல்லி சென்று வந்த நிலையில், சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த, சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்?

தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பிய டாஸ்மாக் வழக்கை விசாரித்து வரும் அமலாகக்த்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குநர் பியூஷ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் கனிம வளக் கொள்ளை  தொடர்பான வழக்குகளிலும் விசாரணை அதிகரிகளாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கையும், பியூஷ் குமார் மற்றும் கார்த்திக் விசாரித்து வந்தனர்.

முதலமைச்சர் டெல்லி பயணம்:

டாஸ்மாக் அலுவலகம், முதலமைச்சரின் உறவினரான ஆகாஷ் பாஸ்கரன் வீடு என, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை அடுத்தடுத்து அதிரடியான சோதனைகளில் ஈடுபட்டு வந்தது. குறிப்பாக டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதோடு, டாஸ்மாக்கில் முறைகேடு செய்யப்பட்ட பணம் ஆகாஷ் பாஸ்கரன் வாயிலாக, சினிமாவில் முதலீடு செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதில் உதயநிதியின் தலையீடு இருப்பதாகவும் சிலர் இணையத்தில் தீவிரமாக களமாடி வந்தனர். இத்தகைய பரபரப்பான சூழலில் தான், 3 ஆண்டுகளாக இல்லாத வகையில், கடந்த மாதம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:

மூன்று ஆண்டுகளாக பங்கேற்காத நிதி ஆயோக் கூட்டத்தில் இப்போது மட்டும் முதலமைச்சர் பங்கேற்பது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். வழக்குகளில் இருந்து தனது அரசையும், மகனையும் காப்ப்பாற்றிக் கொள்ளவே முதலமைச்சர் டெல்லி செல்வதாக விமர்சித்து இருந்தனர். ஆனால், மாநிலத்திற்கான நிதி தொடர்பான கோரிக்கைகளை வைக்கவே டெல்லி சென்றதாக, முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் டாஸ்மாக், செந்தில் பாலாஜி மற்றும் கனிமவளக் கொள்ளை தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த, அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிடப்பில் போடப்படும் வழக்குகள்:

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், டாஸ்மாக் வழக்கில் பல அதிரடியான திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக முக்கிய அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் அந்த வழக்குகளின் விசாரணை முடங்கும் அல்லது தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் வழக்கை தற்போதைக்கு பெரிதாக்க மத்திய அரசு விரும்பவில்லையா? அல்லது திமுக உடன் திரை மறைவில் ஏதேனும் ஒப்பந்தங்கள் உறுதியாகியுள்ளனவா? என ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன. அதேநேரம், அதிகாரிகள் மாற்றம் என்பது திமுகவினருக்கு சிறிது காலத்திற்கு நிம்மதியை தரும் என கூறப்படுகிறது.

Related Post

அஜித் ரசிகர்களை கவர நினைக்கும் சீமான்.. விஜய்க்கு எதிராக போடும் திட்டம்

Posted by - November 13, 2024 0
விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய போது சீமான் அவருக்கு ஆதரவாக பல மேடைகளில் பேசுகிறார். ஒரு அண்ணன் தம்பி பாச வெளிப்பாடாக அவரது கருத்துக்கள் இருந்து வந்தது.…
SSS

நெல் சாகுபடி ஊக்கத்தொகை விவகாரம் – தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!

Posted by - April 13, 2026 0
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என மத்திய நிதியமைச்சர்…
tvk vijay

TVK Vijay : ’விஜய்க்கு 120 வரை தொகுதிகள்’ இதையெல்லாம் நம்பலாமா?

Posted by - April 30, 2026 0
‘இந்தியா டு டே நிறுவன தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு அடிப்படையில் விஜய் 90 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பே இல்லையென்றும், இது திரைப்படத்திலும் கனவிலுமே…
Generated Image November 04 2025 4 27PM

சேலம் வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது தாக்குதல்: கண்ணாடி உடைப்பு

Posted by - November 4, 2025 0
சேலம்: வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் எம்எல்ஏ அருளின் கார் சேதமடைந்தது. சேலம்…

பாஜகவை ரவுண்டு கட்ட திட்டம்.. உயிர்பெறும் I.N.D.I., கூட்டணி, கையிலெடுக்கும் அஸ்திரம் என்ன?

Posted by - July 18, 2025 0
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, எதிர்க்கட்சிகளின் .N.D.I., கூட்டணி ஆலோசனைக் கூட்டம் வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து, I.N.D.I.,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *