தஞ்சை பெரிய கோவிலில் 18 நாட்கள் நடக்கும் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

204 0

தஞ்சாவூர்:

தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும்.

அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி நடப்பட்டது. இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..  திருத்தேரோட்டம் ரத்து | The world famous Tanjore Big Temple Chithrai Festival  started today - Tamil Oneindia

இதனை முன்னிட்டு சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக, கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர். சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெறுகிறது.

கொடியேற்ற விழாவில் அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ரெங்கராஜ், முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சித்திரை பெருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. 2-ம் நாளான நாளை (செவ்வாய்கிழமை) காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடைபெறுகிறது. 3-ம் நாளான 19-ந்தேதி காலை 8 மணிக்கு பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடைபெற உள்ளது.

4-ம் நாளான 20-ந்தேதி காலையில் விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலையில் மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடு நடக்கிறது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் நாட்களில் நாள்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகளுடன் சாமி புறப்பாடு நடைபெறுகிறது.

மே 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவின் கடைசி நாளான மே 4-ந்தேதி தீர்த்தவாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

Related Post

சற்றுமுன் வந்த மழை அலர்ட்.. 6 மாவட்டங்களில் மதியம் 1 மணிக்குள் சம்பவம்! பறந்து வந்த வானிலை அறிவிப்பு

Posted by - December 20, 2023 0
சென்னை: அடுத்த 3 மணி நேரம் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து வெளியான வானிலை…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் – சமாதானம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Posted by - February 28, 2024 0
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சமாதானமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்…

புதுச்சேரி, தமிழகம் முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்: சிறப்பு தொழுகை, தியாக உணர்வுடன் இஸ்லாமியர்கள்

Posted by - June 7, 2025 0
பக்ரீத் பண்டிகையொட்டி, முஸ்லிம்கள் புத்தாடை அணிந்தும், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியும், இனிப்புகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி பகுதி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு…

நிலக்கடலை.. இதயத்தை காக்கும் அட்டகாசமான வேர்க்கடலை.. ஆனா “இவங்க” மட்டும் நிலக்கடலையை தொடவே கூடாதாம்

Posted by - December 14, 2023 0
சென்னை: பல்வேறு சத்துக்களை கொண்டிருக்கும் நிலக்கடலையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? யாரெல்லாம் நிலக்கடலை சாப்பிடக்கூடாது? தெரியுமா? மிகச்சிறந்த புரதத்தின் ஆதாரமாக விளங்கக்கூடியது வேர்க்கடலை என்று சொல்லக்கூடிய…

குடந்தை:அரசு அதிகாரிகளின் அலட்சியபோக்கு..அவதிபடும் பொது மக்கள்…

Posted by - December 8, 2023 0
கும்பகோணம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கபடும் மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடபடுகிறது.அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யாமல் அதன் மீது நடவடிக்கை எடுக்காமலும் மக்களை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *