தனுஷின் ’வாத்தி’ படத்துக்கு புது சிக்கல்.. ஆசிரியர் சமூகத்தை அவமதிப்பதாக எழுந்த சர்ச்சை!

300 0

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘வாத்தி’ திரைப்படம் மீது ஆசிரியர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இந்தப் படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கவனிக்கிறது.

சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.’வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தில் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த 8-ம் தேதி வெளியாகியுள்ளது. கல்வி வணிக மயம் குறித்து இந்தப் படம் பேசியுள்ளதாக தெரிகிறது. அதை கதையின் நாயகன் எப்படி அணுகுகிறார் என்பதுதான் கதைக்களம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு ஆசிரியர்களின் மாண்பை குலைக்கும் விதமாக உள்ளதாக ஆசிரியர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து அனுப்பியுள்ள அந்த மனுவில், நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் விரைவில் (17-02-2023) திரைக்கு வர உள்ளது. அதற்கு… “வாத்தி” என்று பெயர் வைத்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத் தக்கது…! இதே படம் தெலுங்கில் ” சார்” என்ற பெயரில் வெளியாகிறது.

தமிழில் மட்டும் தரக்குறைவான கொச்சையான வார்த்தையில் ஆசிரிய சமூகத்தை அவமதிக்கும் வகையில் “வாத்தி” என்று பெயரிட்டு வெளியிடப்படுகிறது. இதைக் கண்டிப்பதோடு படத்தின் பெயரை மரியாதையான வார்த்தைகளால் ” வாத்தியார்” என்றோ, தெலுங்கில் வைத்ததுபோல “சார்” என்றோ தமிழில் படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும்.

Related Post

கவர்ச்சியில் ஹீரோயின்களுக்கு போட்டியாக வந்த அட்லீயின் மனைவி – வைரல் போட்டோஸ்

Posted by - March 11, 2024 0
இந்திய சினிமாவில் இருக்கும் மாஸ் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் அட்லி. தனது குருவை போலவே பிரம்மாண்டத்திற்கு பெயர்போன இயக்குனர் என்ற பெயரை பெற்றுள்ள இயக்குனர்…

அடுத்து 1000 கோடி வசூல் செய்ய போகும் டைகர் 3 படத்தின் டீசர்

Posted by - September 27, 2023 0
டைகர் 3 சல்மான், கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டைகர் 3. மனீஷ் ஷர்மா இப்படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே வெளிவந்த இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றியடைந்த…

எல்லையே இல்லா மாஸ் வசூல் வேட்டை நடத்தும் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்- 5 நாள் முடிவில் இத்தனை கோடியா?

Posted by - July 4, 2023 0
மாமன்னன் உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். பின் தொடர்ந்து காமெடி ப்ளஸ் ரொமான்ஸ் படத்தில் நடித்துவந்த அவர்…

நடிகை பேட்டி-நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்க எனக்கு விருப்பம் இல்லை…

Posted by - February 25, 2026 0
நடிகர் ஆர்யா தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது, இப்போதும் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய கான்செப்டுடன் ஒளிபரப்பாகி வந்த…

ரஜினி படத்தில் இருந்து சுந்தர்.சி திடீர் விலகல் – விளக்கத்தில் உருக்கம்

Posted by - November 13, 2025 0
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர்.சி. இயக்குவதாக இருந்த நிலையில், அதிலிருந்து விலகுவதாக தற்போது இயக்குநர் சுந்தர்.சி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலக ரசிகர்களை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *