தமிழ்நாடு-புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது: 9.76 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் ….

230 0

தேர்வு மையங்களுக்குள் மின் சாதன பொருட்கள், செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை: பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. பள்ளியில் படித்த மாணவர்கள், தனித் தேர்வர்கள் என 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வு எழுதினார்கள். 5 லட்சத்து ஆயிரத்து 28 மாணவர்களும், 4 லட்சத்து 75 ஆயிரத்து 56 மாணவிகளும், 5 மூன்றாம் பாலினத்தவர்களும் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். சிறைச்சாலைகளில் உள்ள 264 கைதிகளும், மாற்றுத்திறனாளிகள் 13,151 பேரும் இத்தேர்வை எழுத சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

12,639 பள்ளிகள், 4025 மையங்கள் மற்றும் 182 தனித்தேர்வர்களுக்கான மையங்களில் தேர்வு நடக்கிறது. சென்னை புழல் உள்ளிட்ட 9 ஜெயில்களிலும் கைதிகள் தேர்வு எழுதினர். காலை 10 மணி முதல் பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 10 மணி முதல் 10.10 மணி வரை வினாத்தாளை படிப்பதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. 10.10 மணி முதல் 10.15 மணி வரை விவரங்களை சரி செய்ய நேரம் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 3 மணி நேரம் தேர்வு நடந்து முடிந்தது. முதல் நாளான இன்று தமிழ் தேர்வு நடந்தது. இதனையடுத்து 3 நாட்கள் அரசு விடுமுறையாகும். மீண்டும் 10-ந் தேதி ஆங்கில தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 2 அல்லது 3 நாட்கள் இடைவெளி விட்டு தேர்வு நடத்தப்படுகிறது. 20-ந்தேதி தேர்வு முடிகிறது.

தேர்வு மையங்களுக்குள் மின் சாதன பொருட்கள், செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. மாணவர்களை பரிசோதித்த பிறகே தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் குறிப்பிட்ட நேரத்திற்குள் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லவும், தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் காப்பு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 11, 12-ம் வகுப்பு தேர்வு எவ்வித குழப்பமும் இன்றி நடந்து முடிந்தது போல எஸ்.எஸ்.எல்.சி. தேர்வையும் நடத்தி முடிக்க கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 அயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆனார்கள். தமிழ் உள்ளிட்ட முக்கிய பாட தேர்வுகளை அவர்கள் எழுதவில்லை. அதுபோன்ற நிலை 10-ம் வகுப்பு தேர்வில் நடக்கக்கூடாது என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இடைநின்ற மாணவர்களை தேர்வுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று நடந்த தமிழ் தேர்வை எத்தனை பேர் எழுதவில்லை என்ற புள்ளி விவரத்தை தேர்வுத்துறை வெளியிடுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Related Post

தாய்க்கு தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் கட்டிய மகன்

Posted by - June 10, 2023 0
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் . இவரது மனைவி ஜெய்லானி பீவி. இவர்களுக்கு 4 மகள், 1 மகன் உள்ளனர். இவர்…

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா பரவல்: பொதுமக்கள் அச்சம்

Posted by - December 11, 2023 0
புதுச்சேரி: புதுச்சேரியில் சில மாதமாக கொரோனா தொற்று இல்லாமல் பூஜ்ஜியமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதியடைந்து…

ஈபிஎஸ் vs அண்ணாமலை : உழைக்காமல் தலைவரான ஒரே நபர்.. எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து முதலமைச்சரானவர் .. வலுக்கும் வார்த்தைபோர்

Posted by - August 26, 2024 0
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையேயான வார்த்தைப் போர் மீண்டும் வலுத்துள்ளது. கூட்டணியில் இருந்தபோது அதிமுக நல்ல கட்சியாகத் தெரிந்த…

இனியும் பெண் கொடுக்க தயங்குவீர்களா…! ஒரே நாளில் ரூ.4 லட்சத்திற்கு தக்காளி விற்பனை செய்த விவசாயி

Posted by - August 2, 2023 0
திருப்பூர்: தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் தக்காளி விலை உயர்ந்து வருவதால், நடுத்தர…

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக ஆட்சி! – சாதித்தது என்ன?

Posted by - May 6, 2023 0
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று, இரண்டு ஆண்டுகள் நிறைவுற்று செய்து,  மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மு.க.ஸ்டாலின் அரசு சாதித்தது என்ன? 2021 சட்டமன்றத்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *