திமுகாவின் நாடகங்களை தமிழக மக்கள் இனி நம்ப மாட்டார்கள் – அண்ணாமலை விமர்சனம்

270 0

2021 தேர்தல் வாக்குறுதிகளில் இன்னும் பல வாக்குறுதிகள் நிறுவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கும் பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை திமுக கடந்த சில நிமிடங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக கொடுத்த 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், அதே தேர்தல் வாக்குறுதிகளை, அப்படியே மறுபடியும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருப்பதிலிருந்தே, எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தெரிகிறது.

திமுக தனது 2021 தேர்தல் வாக்குறுதிகளில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், அது குறித்து எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு, தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா?

இது போக, 100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும் என்ற 2021 தேர்தல் வாக்குறுதியையும் அப்படியே மீண்டும் இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருக்கிறது திமுக.மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி என்ற நிலையில், திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை என அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Post

செல்போன் செயலியில் களம் இறங்கும் விஜய்.. 234 தொகுதிகளுக்கும் குறி… அரசியல் பிளான் என்ன?

Posted by - March 4, 2024 0
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இந்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்…

காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Posted by - November 21, 2023 0
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த மழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை…

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை – 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

Posted by - October 22, 2025 0
காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாலும், அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்களை மழைநீர் சூழ்ந்ததாலும் விவசாயிகள்…

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இழப்பீடு வழங்கவும் மனமில்லை!- இபிஎஸ்

Posted by - July 14, 2025 0
சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சங்கரன்கோவிலில் காவல்துறையினர் தாக்கியதில்…

அமோனியா வாயு கசிவு விவகாரம்… அறிக்கை வெளியிட்ட நிறுவனம்

Posted by - December 27, 2023 0
சென்னை: சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *