லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இழப்பீடு வழங்கவும் மனமில்லை!- இபிஎஸ்

121 0

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சங்கரன்கோவிலில் காவல்துறையினர் தாக்கியதில் முருகன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மீனாவிற்கு அரசு வேலை வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இதுவரையில் மீனாவுக்கான அரசு வேலையோ, இழப்பீடோ திமுக அரசால் வழங்கப்படவில்லை என செய்திகள் வருகின்றன.

ஸ்டாலின் அவர்களே- நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருக்கும் உங்கள் அரசால், உங்கள் காவல்துறையால் தனது கனவனை இழந்த மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண், 300 ரூபாய் கூலிக்கு வேலை செய்துக் கொண்டிருக்கிறார். மீனாவுக்கு உங்களிடம் இருந்து பதில் வருமா பொம்மை முதல்வரே?

திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கும் நீங்கள் அவசர கதியில் கொடுத்த வேலை மற்றும் நிலம், தங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்று அவரின் குடும்பத்தார் தெரிவித்து வருகின்றனர்.

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கவும் மனமில்லை!

இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி?

லாக்கப் மரணங்களால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான உரிய இழப்பீடுகளை உடனே வழங்கிட வேண்டும் என

ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

Related Post

பொங்கல் பரிசு ரூ.2500 ரொக்க பணத்துடன் வேட்டி, சேலை, கரும்பு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் – விஜயகாந்த் கோரிக்கை

Posted by - December 26, 2022 0
பரிசுத் தொகுப்புகளில் பல்வேறு குறைகளை கண்டுபிடிப்பதால், தற்போது பணமாக கொடுக்கப்பட்டு உள்ளது – அமைச்சர் எ.வ.வேலு 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி…

மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்

Posted by - June 3, 2025 0
கன்னட மொழி குறித்த் கருத்திற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கமலுக்கு கெடு விதித்துள்ள நிலையில் கன்னட திரைப்பட சங்கத்திற்கு கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார் தக்…
food

தோசை சாப்பிட உங்களுக்கு பிடிக்குமா? தோசை சாப்பிட்டே உங்க எடையை ஈஸியா குறைக்கலாமாம் தெரியுமா?

Posted by - December 2, 2023 0
எடையை அதிகரிப்பது என்பது அவ்வளவு எளிதானதாக இருக்கிறதோ எடையைக் குறைப்பது அவ்வளவு கடினமானதாக உள்ளது. அதிகரித்த எடையைக் குறைக்க பெரும்பாலான மக்கள் டயட்டை நம்பியிருக்கிறார்கள். எடையைக் குறைக்க…

12 வயது சிறுமிக்கு வாலிபருடன் திருமணம்- முதலிரவு அறையில் இருந்து மீட்ட அதிகாரிகள்

Posted by - June 10, 2023 0
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்ட சைல்டு லைன் கண்காணிப்பாளர் அன்புச்செல்விக்கு 1098 லைல்டு லைன் தொடர்பு எண்ணில் ஒரு புகார் வந்தது. அதில் ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில்…
covai

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீஸார் – நடந்தது என்ன?

Posted by - November 4, 2025 0
கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட 3 பேரும் கோவை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *