திருடச்சென்ற வீட்டில் பிரியாணி, மது சாப்பிட்டு தூக்கம்போட்ட வாலிபர்

257 0

திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் நேற்று காலை வேலை நிமிர்த்தமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மதிய நேரத்தில் பூட்டியிருந்த வெங்கடேசன் வீட்டில் மேற்கூரைகள் பிரிக்கப்பட்டு கிடந்தது.3 person arest for theft case | சேவூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1  லட்சத்து 20 ஆயிரம் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், வெங்கடேசனுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடேசன் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது முன் அறையில் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

மேலும் பாத்திரங்கள், பேன் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மூட்டை கட்டி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் வீடு முழுவதும் சோதனையிட்டபோது படுக்கையறையில் வாலிபர் ஒருவர் குறட்டை விட்டபடி நன்றாக தூங்கி கொண்டிருந்தார்.

படுக்கையறை அருகே மது பாட்டில்களும், பிரியாணி சாப்பிட்ட பொட்டலங்களும் இருந்தன. போலீசார் அந்த வாலிபரை தட்டி எழுப்பினர். தூக்கத்தில் இருந்து முழித்து கொண்ட அந்த வாலிபர் தன் முன்னே போலீசார் நிற்பதை கண்டு திருதிருவென முழித்தார்.

அவரிடம் போலீசார் கிடுக்குப்படி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் வெட்டுக்குளம் அருகே உள்ள மேலசேத்தன்ஏந்தல் கிராமத்தை சேர்ந்த சுதந்திரதிருநாதன் (வயது27) என்பது தெரியவந்தது. பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க வந்த இவர் நேற்று மதியம் பிரியாணி, மதுபாட்டிலுடன் வெங்கடேசனுடன் வீட்டில் ஏறி குதித்துள்ளார்.

பின்னர் வீட்டில் திருடிய பொருட்களை மூட்டை கட்டிய சுதந்திர திருநாதனுக்கு பிரியாணியும், மதுவும் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என தோன்றியுள்ளது. அதன்படி இரண்டையும் சாப்பிட்ட பின் அவனுக்கு போதை தலைக்கு ஏறியது. சிறிது நேரம் கண்ணயர்ந்து விட்டு செல்லலாம் என படுக்கையறையில் சுதந்திரநாதன் தூங்கியது தெரியவந்தது.

போலீசார் சுதந்திர திருநாதனை கைது செய்து வா ராஜா!… ஜெயிலில் போயி தூங்கலாம் என்று வேடிக்கையுடன் அழைத்து சென்றனர். திருட வந்த வீட்டில் வாலிபர் தூங்கி பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவரை கைது செய்த வீடியோவும் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

Related Post

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பழி வாங்கிய ரஜினி.. நடு ரோட்டில் செய்த மாஸ் சம்பவம்

Posted by - November 30, 2024 0
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒரு கால கட்டத்தில் ரஜினி எந்த அளவுக்கு எதிர்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது…

கள்ளக்காதல் ஜோடியை திட்டம் போட்டு சிக்க வைத்த வாலிபர்கள்: இளம்பெண் தற்கொலை முயற்சி

Posted by - November 21, 2023 0
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர்…

5ஆவது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்!கண்டுகொள்ளாத தமிழக அரசு…

Posted by - December 30, 2025 0
சம வேலைக்கு சம ஊதியம் கோரி எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு 5-ஆவது நாளாகப் போராடிய இடைநிலை ஆசிரியர்கள்.. சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்

Posted by - July 28, 2025 0
சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக…

பொங்கல் பரிசு ரூ.2500 ரொக்க பணத்துடன் வேட்டி, சேலை, கரும்பு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் – விஜயகாந்த் கோரிக்கை

Posted by - December 26, 2022 0
பரிசுத் தொகுப்புகளில் பல்வேறு குறைகளை கண்டுபிடிப்பதால், தற்போது பணமாக கொடுக்கப்பட்டு உள்ளது – அமைச்சர் எ.வ.வேலு 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *