திருமணம் ஏன் செய்து கொள்ளவில்லை..? நடிகை ஸ்ருதிஹாசன் பதில்..!

245 0

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தான் தற்போதுவரை திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகையான ஸ்ருதிஹாசன், பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஆவார். ஸ்ருதிஹாசன் 6வது வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் அந்தப் பாடலை பாடினார். இதைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசன் பல்வேறு படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

2011-ஆம் ஆண்டில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்தார் ஸ்ருதிஹாசன். அந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதையடுத்து ஸ்ருதிஹாசன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் தற்போது ரஜினியின் கூலி படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

ஸ்ருதிஹாசன் சாந்தனு ஹசாரிகா என்பவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில், திடீரென பிரேக்கப் செய்து கொண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இதற்கிடையே ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டியில் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், தற்போதும் தான் அந்த முடிவில் இருந்து மாறவில்லை என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறி உள்ளார்.திருமணம் செய்வதை விட ரிலேஷன்ஷிப்பில் இருப்பதையே விரும்புவதாகவும், திருமணமே செய்யமாட்டேன் என்றும் கூறமாட்டேன் என தெரிவித்துள்ளார். Never என்ற வார்த்தையை என்னால் சொல்ல முடியாது, வாழ்க்கை என்பது unpredictable என்றார். எனவே, ஸ்பெஷலான ஒருவர் வந்தால் அதை பற்றி யோசிக்கலாம் என்றும், ஆனால் அது நடக்கும் என்று தனக்கு தோன்றவில்லை என்றும் ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

Related Post

ராகவா லாரன்ஸின் ருத்ரன் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?- இத்தனை கோடியா?

Posted by - April 15, 2023 0
ருத்ரன் திரைப்படம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு வெளிவந்துள்ள படம் தான் ருத்ரன். திருமாறன் கதையில் கதிரேசன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தில் லாரன்ஸுடன் முதன்முறையாக…

“நயன்தாராவின் அப்பாவாக நடிக்கும் சீமான்! படத்தின் கதை இதுதானா?!”

Posted by - January 4, 2024 0
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்’. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா…

உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?.. வெங்கட் பிரபுவிடம் சான்ஸ் கேட்ட அஜித்

Posted by - March 28, 2023 0
கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இடம் பிடித்தவர் தான் அஜித் குமார். இவர் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 -ம் ஆண்டு வெளிவந்த…

விஜய், அஜித் போட்டி எங்கே ஆரம்பித்தது?

Posted by - October 24, 2024 0
விஜய் அஜித் இருவரும் இன்று முன்னணி நடிகர்களாக உள்ளனர். இருவர் போட்டி போடுகிறார்களா இல்லையோ, ஆனால் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த நிலையில்,…

விஜய் மகன் ஜேசன் சஞ்சய்-யின் முதல் படம்.. கைவிட்ட அனிருத்? கைதூக்கிவிடும் மியூசிக் டைரக்டர்

Posted by - November 23, 2024 0
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்துக்கு இசையமைப்பது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தன் தந்தை மாதிரி சினிமாவில் ஹீரோவாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *