துணிவு பட புரொமோஷன்… சோகமான அஜித் ரசிகர்கள்…

217 0

இதில் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத், நடிகை மஞ்சு வாரியர், தயாரிப்பாளர் போனி கபூர், இசையமைப்பாளர் ஜிப்ரன் ஆகியோர் கலந்துக் கொள்வதாக தெரிகிறது.

துணிவு படத்தின் புரொமோஷன் குறித்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார், ஜிப்ரன் இசையமைக்கிறார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணிவு படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே படத்தின் முதல் சிங்கிளான ’சில்லா சில்லா’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஜிப்ரன் இசையமைத்த இந்தப் பாடலை அனிருத் பாடியிருந்தார். இதைத் தொடர்ந்து, காசே தான் கடவுளடா, கேங்ஸ்டா என அடுத்த இரண்டு பாடல்களும் வெளியாகின.இந்நிலையில் துணிவு படத்தின் புரொமோஷன் வரும் 1-ம் தேதி தொடங்குவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதில் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத், நடிகை மஞ்சு வாரியர், தயாரிப்பாளர் போனி கபூர், இசையமைப்பாளர் ஜிப்ரன் ஆகியோர் கலந்துக் கொள்வதாக தெரிகிறது. வழக்கம் போல் துணிவு படத்தின் புரொமோஷனிலும் கலந்துக் கொள்வதில்லையாம். இதனால் சோகத்தில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

Related Post

ஒரே கதையை 2 படமாக எடுத்து ரசிகர்களை குழப்பிய இயக்குனர்கள்.. என்ன கொடுமை பாஸ் இதெல்லாம்

Posted by - January 1, 2025 0
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்த கதையை பின்பற்றி பல படங்கள் வருவதுண்டு. சில இயக்குனர்கள் வெற்றி பெற்ற படத்தின் நடிகர்களை வைத்து அதே…

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர் கான்.. காரணம் என்ன

Posted by - July 1, 2025 0
சித்தாரே ஜமீன் பர் இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் உருவாகி கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளிவந்த படம் சித்தாரே ஜமீன்…

உனக்கு தைரியம் இருந்தா என்ன அடிடா.. அஸீம் அமுதவாணன் இடையே கடும் சண்டை

Posted by - December 1, 2022 0
பிக் பாஸ் பிக் பாஸ் 6 தற்போது நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இந்த வாரம் சற்று சலசலப்பும், சண்டையும் அதிகமாகவே காணப்படுகிறது. கடும் சண்டை…

நடிகர் சூரி நடித்துள்ள விடுதலை படம் எப்படி உள்ளது?

Posted by - March 31, 2023 0
விடுதலை வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதன்முநையாக நாயகனாக நடித்துள்ள திரைப்படம் விடுதலை. சூரி இதில் போலீஸ் வேடத்தில் பல அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். படத்திற்காக…

கவினின் அடுத்த படம் ‘ஸ்டார்’.. வைரலாகும் போஸ்டர் இதோ

Posted by - August 29, 2023 0
கவின் நடிகர் கவினின் அடுத்த படம் படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. இது பற்றிய ஹிண்ட் நேற்றே அவர்கள் கொடுத்திருந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்டர் மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *