death 1

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்

298 0

சென்னை:

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் | DMDK leader Vijayakanth passes away

மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலமானார் என்று மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துணை ஆணையர் தீபக் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை முன்பு தொண்டர்கள் மிகுந்த சோகத்துடன் காத்திருக்கின்றனர்.

Related Post

மீனவர்கள் நலனில் ஊழல் திமுக அரசுக்கு அக்கறை கிடையாது!- அண்ணாமலை

Posted by - August 16, 2023 0
வரும் பாராளுமன்றத் தேர்தலில், சந்தர்ப்பவாத, ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்போம்  என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்)…
Gemini Generated Image e239sme239sme239

இன்று தமிழ் புத்தாண்டு! உற்சாகமாக கொண்டாடும் தமிழர்கள்!

Posted by - April 14, 2026 0
தமிழ் புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது தமிழ் புத்தாண்டு. ஒவ்வொரு…

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை வெட்டிக் கொல்ல காதலனுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மாணவி

Posted by - August 29, 2023 0
தேனி: தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி வாசவி நகர் ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேணுகோபாலபாண்டியன் (வயது 55) பழைய இரும்பு வியாபாரி. இவர் கடந்த 2 நாட்களுக்கு…

தமிழக வெற்றி கழகத்தின் முதல் கூட்டம்.. செயற்குழு உறுப்பினர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அழைப்பு

Posted by - February 7, 2024 0
நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *