தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால் அடுத்த மாதமே பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிவிடும்: ராமதாஸ்

310 0

சென்னை: இந்த தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால், அடுத்த மாதமே பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது உள்ளிட்ட அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களையும் ஏமாற்றுவதற்கு அனுமதிக்கக்கூடாது.2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாததற்கு அரசின் நிதி நெருக்கடிதான் காரணம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுவது ஏமாற்று வேலை. அதேபோல், மத்தியில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறுவது மோசடியாகும்.

7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமாகும்போது, தமிழகத்தில் மட்டும் அதற்கு சாத்தியம் இல்லை என்று கூற முடியாது.

மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் அனைத்து 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை அரசு ஊழியர்களும், பொதுமக்களும் வீழ்த்த வேண்டும். அவ்வாறு வீழ்த்தினால், அதற்கு அடுத்த மாதமே பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் திமுக அரசு நிறைவேற்றும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Post

விஜய் மீது செருப்பு தூக்கி வீசிய நபர்.. செருப்பால் அடிக்கும் அளவிற்கு என்ன பிரச்சனை

Posted by - December 29, 2023 0
அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் நேற்று இரவு விஜயகாந்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் வந்திருந்தார். இவர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் போது,…

சினிமாவை விட்டு விலகும் முடிவில் விஜய்? அப்போ கடைசி படம் இதுதானா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Posted by - June 18, 2023 0
சினிமாவை விட்டு விலகும் முடிவில் விஜய்? அப்போ கடைசி படம் இதுதானா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய், சினிமாவை…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

Posted by - January 1, 2023 0
தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அரசின்…

தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக தங்கத்தை வாரி வழங்கியதுதான் அதிமுக அரசாங்கம் – இபிஎஸ்

Posted by - April 13, 2024 0
தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக தங்கத்தை வாரி வழங்கியது தான் அதிமுக அரசாங்கம் என தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக…

ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Posted by - December 9, 2025 0
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சரண் விடுப்பு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், எப்போது சரண் விடுப்பு பணம் பலன் பெறலாம், யாருக்கெல்லாம் தகுதி உள்ளது என்பது தொடர்பாக அரசாணை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *