திருவிடைமருதூர் | பிரச்சாரத்தில் திமுக அமைச்சர், அரசு கொறடா, எம்பியை வழிமறித்து கேள்வி கேட்ட விவசாயிகள்

237 0

மயிலாடுதுறை: தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களை இணைக்கும் சாலையை சீரமைக்கக்கோரி கடந்த 3 ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற திமுக எம்பியை வழிமறுத்து விவசாயிகள் கேள்வி கேட்டனர்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில், இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி. செழியன், மயிலாடுதுறை எம்பி செ.ராமலிங்கம் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், திருவிசைநல்லூர் தொடங்கி பல்வேறு கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.அப்போது, தஞ்சாவூர் மாவட்டம், செ.புதூர்-மயிலாடுதுறை மாவட்டம் திருவாலாங்காடு சாலையில் உள்ள திருக்குழம்பியம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, வேட்பாளர் ஆர்.சுதா மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி. செழியன் ஆகியோர் சென்ற வாகனத்தை திடீரென வழிமறித்த விவசாயிகள், பல ஆண்டுகளாக சாலை வசதி செய்து கொடுக்க வில்லை என கேள்வி கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை கொறடா கோவி.செழியன், சாலை வசதி செய்து கொடுப்பதாக, பதில் அளித்தார். அதன்பின்னர் அந்த வாகனம் அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றது. இதையடுத்து மற்றொரு வாகனத்தில் வந்த மயிலாடுதுறை எம்பி செ.ராமலிங்கம் மற்றும் கட்சியினரை வழிமறித்த விவசாயிகள், “2 மாவட்டங்களை இணைக்கும் இந்தச் சாலையில் கடந்த 5 ஆண்டுகளாக புதிய சாலை அமைத்துத் தரவில்லை. உங்களிடம் 3 ஆண்டுகளாக மனு அளித்துள்ளோம். இதுவரை, எந்தவித நடவடிக்கையும் இல்லை” என கேள்வி கேட்டனர்.

இதற்கு பதிலளித்த செ.ராமலிங்கம், “நான் ஒன்றியக்குழுத் தலைவராக இருந்தபோது, இந்த சாலையை அமைத்துக் கொடுத்துள்ளேன். இந்தச் சாலையில் அதிகமாக டிராக்டர்கள் சென்று வருவதால், சாலை சேதமடைந்து விட்டது. வெற்றிபெற்ற பிறகு பார்ப்போம்” என்று பதிலளித்தார். அப்போது, அங்கிருந்த விவசாயிகள், டிராக்டரை பயன்படுத்தாமல் விவசாயம் எப்படிச் செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பினர். மேலும், சாலை அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் கூறிக்கொண்டு இருந்தபோதே. செ.ராமலிங்கத்தின் வாகனம் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றது.

Related Post

dmk vs vck

திமுகவை சுத்துப்போட்ட விசிக- நடந்தது என்ன?

Posted by - May 22, 2026 0
ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது, அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே. அநீதி தொடர்ந்து, அனைத்தும் உரைத்தால் அணைக்க முடியா அனலில் தகித்து போவீர்- விசிக ஆற்றாமையால் அள்ளிவீசும்…
tvk aiadmk

TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?

Posted by - May 28, 2026 0
தமிழக வெற்றிக் கழகத்தில் அடுத்தடுத்து அதிமுக-வின் முன்னாள் எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் இணைவது தவெக கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒவ்வொரு…

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் வாக்குரிமை: திருமாவளவன் எச்சரிக்கை! ஸ்டாலின் நடவடிக்கை தேவை!

Posted by - August 2, 2025 0
எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும் – திருமாவளவன் விழுப்புரம்: வடமாநிலத்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின அரசியல் தலைவர்களாக…

மேடையில் அமித் ஷா அப்படி என்ன சொன்னார்? தமிழிசை அளித்த பதில்

Posted by - June 13, 2024 0
ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழாவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசையை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.…
vijay cm

TVK Vijay: எதுக்குயா தவெக? திமுக, அதிமுகவே ஆண்டுட்டு போலாமே..! தூயசக்தி பிராண்டை இழக்கும் CM விஜய்?

Posted by - May 26, 2026 0
TVK Vijay: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசியல் நிலைப்பாடுகளை கண்டு, இதற்கு திமுக மற்றும் அதிமுகவே தமிழ்நாட்டை ஆளலாமே என நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.TVK…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *