rfseff4b

தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

163 0

தொகுதி மறுவரையால் தென்மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்பது அரசியல் காரணங்களுக்கான பொய்ப் பிரசாரம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை குறித்து மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, மகளிர் இடஒதுக்கீட்டால் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் குறையாது என்று தெரிவித்தார்.

 

 

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவால் யாருக்கும் பாதகம் ஏற்படாது என்று உறுதிமொழி வழங்க தயார் என்றும், இதற்கு தமிழில் பொருத்தமான வார்த்தை இருந்தால் அதை பயன்படுத்த தயார் என்றும் பிரதமர் கூறினார்.

தொகுதிகள் சதவிகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது, அனைவருக்கும் சமமான விகிதாச்சாரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தொகுதி மறுவரையால் தென்மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்பது அரசியல் காரணங்களுக்கான பொய்ப் பிரசாரம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Related Post

உ.பி.யில் 72 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழப்பு: அதிக வெப்பம் காரணமா?

Posted by - June 19, 2023 0
உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் திடீரென அங்குள்ள மக்களுக்கு தீவிர காய்ச்சல், மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு படையெடுத்தனர். மருத்துவமனையில சிகிச்சை…

மாநில அந்தஸ்து கோரி போராட்டம்: லடாக் கலவர பாதிப்பும் பின்னணியும்

Posted by - September 25, 2025 0
லே: ல​டாக்​கில் மாநில அந்​தஸ்து கோரி நேற்று நடை​பெற்ற போராட்​டத்​தில் கலவரம் வெடித்​தது. இதில் 4 பேர் உயி​ரிழந்​தனர். 60-க்கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். காஷ்மீரில் இருந்து லடாக்…

என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்…

Posted by - March 29, 2025 0
நீங்கள் செலவு செய்யும் பணத்திற்கு ஊக்கத் தொகை கிடைக்கும் என்றால் நம்புவீர்களா.? யார் அப்படி கொடுப்பது என யேசிக்கிறீர்களா.? மத்திய அரசுதான். என்ன விவரம் தெரியுமா.? மத்திய…

கனமழையால் யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டிய நீர்மட்டம்: கரையோர மக்கள் வெளியேற்றம்

Posted by - July 11, 2023 0
தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில பேய்மழை…
annamalai bjp

எம்பி ஆகிறார் அண்ணாமலை? ஆந்திராவில் இருந்து அடித்துள்ள ஜாக்பாட்!

Posted by - April 26, 2026 0
ஆந்திராவில் காலியாக உள்ள 4 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிகளில் ஒரு பதவியை அண்ணாமலைக்கு வழங்க பாஜக முடிவு செய்துள்ளது. தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை. தலைவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *