நன்றி கெட்ட வைகோ? ”அப்ப இனிச்சது, இப்ப கசக்குதோ” நம்பிக்கை இல்லாத போர் வாள்?

193 0

மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் மூன்று முறை எப்போது எனது உயிரை காப்பாற்றினார்? என பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கும், துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

வைகோ Vs மல்லை சத்யா:

மதிமுக பொதுச்செயலாலர் வைகோவின் மகன் துரை வைகோ மற்றும் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா இடையே நிலவி வந்த கருத்து மோதல் அண்மையில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வைகோ மற்றும் மல்லை சத்யா இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்வதாக வைகோ குற்றம்சாட்டினார்.  இதுதொடர்பாக பேசிய மல்லை சத்யா, “குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவுக்காக எனக்கு துரோகி பட்டம் கொடுத்து வெளியேற்றப் பார்க்கிறார். வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை வாரிசு அரசியலுக்காக துரோகி என சொல்லும் அளவுக்கு துணிந்துள்ளார்” என வேதனை தெரிவித்தார்.

மூன்று முறை உயிரை காப்பாற்றினாரா?

மல்லை சத்யாவின் பேச்சுக்கு நேற்று பூந்தமல்லியில் நடந்த நிகழ்ச்சியில் வைகோ பதிலளித்தார். அப்போது, “மூன்று முறை உயிரை காப்பாற்றியதாக மல்லை சத்யா கூறியுள்ளார். மாமல்லபுரம் கடலில் விழுந்தபோது காப்பாற்றினார். மற்ற 2 முறை எப்போது?” என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். பழைய நிகழ்வுகளை தேடியதில் கடலில் விழுந்தபோது வைகோவை காப்பாற்றியதை தவற, மற்றபடி எந்த சூழலிலும் அவரது உயிரை மல்லை சத்யா காப்பாற்றியதாக எந்த தரவுகளும் இல்லை. வைகோவின் கேள்விக்கு மல்லை சத்யாவும் தற்போது வரை எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை. இதனால், அவர் வாய்க்கு வருவதை அடித்து விடுவதாக வைகோ ஆதரவாளர்கள் சாடி வருகின்றனர்.

நன்றி கெட்ட வைகோ?

இதுபோக நேற்றைய நிகழ்ச்சியிலேயே, “திருச்சி திமுக மாநாட்டிற்கு செல்லாமல் போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. திமுக கூட்டணியில்தான் நாங்கள் எந்த சூழ்நிலையிலும் நீடிப்போம்” எனவும் வைகோ பேசினார். இந்த பேச்சை தொடர்ந்து தான் அவருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  பொடா சட்டத்தில் கைது செய்து 19 மாதங்கள் சிறையிலடைத்த ஜெயலலிதாவுடன் 2006ம் ஆண்டு கூட்டணி அமைத்து, 35 தொகுதிகளை வைகோ பெற்றார். அரசியல் லாபத்திற்காக அனைத்தையும் மறந்து கூட்டணி அமைத்து, அதிமுகவின் ஆதரவில் தனது கட்சிக்கு மாநில அங்கீகரத்தையும் பெற்றார். ஆனால், இன்று அதையே மறந்துவிட்டு, அதிமுக உடனான கூட்டணி மிகப்பெரிய தவறு என்கிறீர்களா? இப்படி அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றுவதால் தான் நீங்கள் மக்களின் நம்பிக்கையை பெற முடியாத தோல்வியுற்ற தலைவராக இருப்பதாகவும் சாடி வருகின்றனர்.

வார்த்தையை காப்பாற்றாத வைகோ:

கருணாநிதியின் வாரிசு அரசியலுக்கு குறிப்பாக ஸ்டாலினை எதிர்த்து திமுகவில் இருந்து விலகி சென்று தான், மதிமுக எனும் கட்சியையே வைகோ தொடங்கினார். ஈழப்போரின் போது கருணாநிதி தமிழன துரோகி என குற்றம்சாட்டினார். திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே இலக்கு என சூளுரைத்தார். ஆனால், இன்று அவரது நிலைப்பாட்டை மொத்தமாக மாற்றி, ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சராக வேண்டும், அவரது தலைமையிலான திமுக கூட்டணியிலேயே மதிமுக தொடரும் என்றும் பேசி வருகிறார். இப்படி தனது அரசியல் பயணத்தில் சொன்ன பல முக்கிய அறிவிப்புகளையும், சற்றும் பின்பற்றாமல் நடந்து கொள்கிறார் என்பது வைகோ மீது பன்னெடுங்காலமாக உள்ள குற்றச்சாட்டாகும். இந்நிலையில் தான், மகன் துரை வைகோவிற்காக தன்னுடன் பல ஆண்டுகளாக பயணித்து வரும், மல்லை சத்யாவிற்கே துரோகி பட்டம் சுமத்துவதாகவும் வைகோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Post

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை – சீமான்

Posted by - February 7, 2024 0
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை – சீமான் நாம் தமிழர் கட்சிக்கு எதிரான மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்த அனைவருக்கும்…

“பா.ஜ.கவுக்கும் எனக்கும் கிடைத்த ஆதரவை பார்த்து திமுகவிற்கு தூக்கமே தொலைந்து விட்டது” – பிரதமர் மோடி

Posted by - March 19, 2024 0
பிரதமர் மோடி தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையான கூட்டணி. நேற்று பா.ம.க சேர்ந்துள்ளதால். ராமதாஸின் அனுபவ அறிவும் , அன்புமணியின் திறமையும் தமிழகத்தை புதிய உயரத்திற்கு…

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

Posted by - April 20, 2026 0
தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கரூரில் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய…

கர்மா சும்மா விடுமா? – உலகத்தில் முதல் முறை.. திருமாவை சாடிய மோகன் ஜி!

Posted by - April 7, 2026 0
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. அங்கு ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனாம் தொகுதிகளில் தான் அறிவித்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என…

பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!

Posted by - July 23, 2025 0
அதிமுக கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வருவதற்காக பாஜக-வை கூட்டணியில் இருந்து வெளியேற்ற எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *