Generated Image November 13 2025 5 06PM

நான் முதல்வன் திட்டம்: இவர்களுக்கெல்லாம் ரூ.50,000 ஊக்கத்தொகை! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

213 0

நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 50.000 ரூபாய் ஊக்கத்தொகையாக நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 50,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் ஆர்வலர்களுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பயிற்சித் திட்டங்கள்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது துணை முதலமைச்சரால் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் 2025- 2026-க்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையில், ஒன்றிய குடிமைப் பணி தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்த, ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு, அவர்கள் முதல்நிலை தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், 10 மாதங்களுக்கு, மாதம் 7,500 ரூபாயும், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 25,000 ரூபாயும், ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது எனவும், இதைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்விற்குத் தயாராகும் இளைஞர்களுக்கு 50,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும். இத்திட்டம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப் படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் (25.05.2025) தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 659 மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

87 பேர்

தற்போது யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், நான் முதல்வன் யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற்ற 659 பயனாளிகளில், 155 பேர் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 87 பேர் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான பயிற்சி பெற தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 50.000 ரூபாய் ஊக்கத்தொகையாக நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2025) யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக,  https://naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையைப் படித்து பார்த்து, 13.11.2025 முதல் 24.11, 2025 வரை விண்ணப்பிக்கலாம் என்று சிறப்புத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Related Post

பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை …

Posted by - May 11, 2023 0
மன்னார்குடி சட்டசபை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். தி.மு.க. அரசு பதவியேற்ற 2 ஆண்டில் 3-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை: தி.மு.க. அரசு…

வங்காளதேசம் அருகே மிதிலி புயல் கரையைக் கடந்தது: வானிலை மையம் தகவல்

Posted by - November 18, 2023 0
சென்னை: வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றது. கடந்த 14-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…

3 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: அதிகாரிகள், ஊழியர்கள் பணியில் இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Posted by - December 29, 2023 0
சென்னை: தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்னும் முழுமையாக…

ஒரு வயது குழந்தைக்கு அரிய வகை நோய்: சிகிச்சை செலவுக்காக ரூ.17½ கோடி உதவியை நாடும் பெற்றோர்

Posted by - July 29, 2023 0
சென்னை: சென்னை சேலையூரில் வசித்து வருபவர் ஆகாஷ் மிஸ்ரா. ஐ.டி. நிறுவன ஊழியரான இவருக்கு ஒரு வயதில் சிவான்ஷி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை…

திமுகாவின் நாடகங்களை தமிழக மக்கள் இனி நம்ப மாட்டார்கள் – அண்ணாமலை விமர்சனம்

Posted by - March 20, 2024 0
2021 தேர்தல் வாக்குறுதிகளில் இன்னும் பல வாக்குறுதிகள் நிறுவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கும் பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா? என தமிழக பாஜக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *