“நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது” புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!

182 0

‘இரும்பின் தொன்மை’ எனும் நூல் வெளியிட்டு விழாவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். என்னவாக இருக்கும் என மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாளை நடைபெறும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூல் வெளியிட்டு விழாவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்:

இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழ்வு நாளை காலை 10 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது! வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு:

தமிழர் மரபு, சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக முக்கிய ஆதாரம் ஒன்றை தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

தமிழ்நாட்டில் இன்னும் 15 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வரின் அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பி இருக்கின்றன. ஒருவேளை, மக்களுக்கு பயன் தரும் நோக்கில் சமூக நலத்திட்டம் தொடர்பான அறிவிப்பு ஏதேனும் வெளியாகலாம் என ஒரு தரப்பினர் தகவல் கூறுகின்றனர்.

Related Post

டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது…

Posted by - March 17, 2025 0
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக இன்று பாஜகவினர் போராட்டம் நடத்தும் நிலையில், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை…

அரசு ஆஸ்பத்திரியில் இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கை அகற்றம்: தவறான சிகிச்சை என கணவர் குற்றச்சாட்டு

Posted by - September 28, 2023 0
சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜீனத் (வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதி (32). இவர் நெஞ்சுவலி காரணமாக அருகில் உள்ள தனியார்…

சென்னையில் நில அதிர்வுக்கு மெட்ரோ பணிகள் காரணமில்லை- மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கம்

Posted by - February 22, 2023 0
சென்னை அண்ணா சாலையில் இன்று காலை 10 மணியளவில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டது. இதன் காரணமாக, அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்…

காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா?

Posted by - February 5, 2026 0
சென்னையில் காகங்கள் உயிரிழந்ததற்கு பறவைக்காய்ச்சலே காரணம் என்று ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்துள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. சென்னையில் கடந்த மாதம் 5ம் தேதி…

ஜெயலலிதாவின் விசுவாசி.. பால் பிசினஸில் கொடி கட்டி பறந்த நயினார்.. யார் இந்த திருநெல்வேலிக்காரர்? Nainar Nagenthran to be 13th Tamil Nadu BJP president….

Posted by - April 11, 2025 0
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற எட்டே ஆண்டுகளில் அதன் மாநில தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட உள்ளது. ஒரு காலத்தில் பால் தொழிலில் கொடி கட்டி பறந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *