நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி

191 0

இந்தி திணிப்பை திமுக எதிர்க்கிற இலட்சணம் இதுதானா?” என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

PM SHRI திட்டத்தில் திமுக தலைமையிலான தமிழக அரசின் கடித்தத்தை வெளியிட்டு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

அதிமுக கேள்வி:

அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேலூரில் நேற்று தெளிவாக பேசிவிட்டார். ஆனால், தேசிய கல்வி கொள்கையை ஏற்று
PM SHRI திட்டத்தை செயல்படுத்த MoU போட தயார் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான  அரசு கடிதம் எழுதியது ஏன்?  இந்தி திணிப்பை திமுக எதிர்க்கிற இலட்சணம் இதுதானா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தமிழக அரசின் கடிதத்தில் இருப்பது என்ன?

தமிழக அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி மத்திய அரசு எழுதியுள்ள அந்த கடிதத்தில், “பள்ளிக் கல்வித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பல முயற்சிகளை செயல்படுத்தி எங்களது மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தரமான கல்வியை வழங்குவதில் தமிழக அரசு எப்போதும் உறுதியாக உள்ளது.

23.02.2024 தேதியிட்ட உங்களது கடிதத்தைக் குறிப்பிட்டு, மாநிலத்தில் PM SHRI பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை செயலர் தலைமையில், மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், PM SHRI பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், அடுத்த கல்வியாண்டு 2024-25 தொடங்குவதற்கு முன், மாநில அரசால் கையெழுத்திடப்படும். 2023-24ஆம் நிதியாண்டிற்கான 3வது மற்றும் 4வது தவணையை தயவு செய்து வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தமிழக அரசின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post

விவசாயம் குறித்து விவாதிக்கத் தயாரா..?

Posted by - April 4, 2024 0
கொடுத்த வாக்குறுதிகளில் 10 சதவிகிதத்தைக் கூட திமுக நிறைவேற்றவில்லை – எடப்பாடி பழனிசாமி விவசாயம் பற்றி என்னுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…

“இது வெறும் தேர்தல் களமல்ல… அறப் போர்க்களம்!” — முதல்வர் ஸ்டாலின்

Posted by - March 21, 2024 0
சென்னை: “இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்தும் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான தேர்தல்களாக இருந்தன. இந்த முறை யார் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதற்கான…

“அப்பா எல்லாம் வீண் விளம்பரம்” கோவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்

Posted by - February 19, 2025 0
பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒரு துரும்பைக் கூட அள்ளிப்போடாத மு.க.ஸ்டாலின் வீண் விளம்பரத்திற்காக அப்பா, அண்ணன் என்று நாடகம் போடுவதால் என்ன பலன்? என்று அண்ணாமலை கேள்வி…

பாத்துட்டே இருங்க எல்லோருக்கும் வேட்டு வைக்கப் போகிறேன் – நடிகர் மன்சூர் அலிகான் அதிரடி..!

Posted by - March 26, 2024 0
எதிர்வரும் மக்களவை தேர்தலில் வேலூர் மக்களவை தொகுதியில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்காக தனது வேட்புமனுவை…

விஜய் கட்சியில் அதிரடி: தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாற்றம்..!

Posted by - February 10, 2024 0
TVK Vijay | நடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்ததற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அண்மையில், நடிகர் விஜய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *