பட்டையைக் கிளப்பும் ஜியோ.. வெறும் 11 ரூபாய்க்கு 10 ஜிபி டேட்டா இலவசம்.. ஆனால் ஒரு கண்டிஷன்

238 0

#jio #india #reliance #mukeshambani #reliancejio #ambani #airtel #nitaambani #akashambani #ishaambani #dhirubhaiambani #anantambani #radhikamerchant #shlokamehta #ambaniwedding #kokilabenambani #antilia #ambanifamily #reliancefoundation #neetaambani #akustoletheshlo #aliabhatt #idea #anandpiramal #mumbai #punjab #vodafone #janhvikapoor #pixeltv #pixelmedia

 

 

 

 

 

சென்னை: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் போன்களில் இணைய வசதியை பயன்படுத்தி வருகின்றனர். நாளின் இறுதியில் டேட்டா லிமிட் முடிந்தபிறகு கூடுதல் டேட்டாவுக்காக ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்படியான பூஸ்டர் வவுச்சர்களை தேடும் வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் 10 ஜிபி டேட்டாவை அள்ளித் தருகிறது ஜியோ.ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் மக்கள் பெரும்பாலும் அதிக டேட்டா வழங்கும் ரீசார்ஜ் திட்டத்தையே விரும்புகின்றனர். அழைப்பு, மெசேஜ் போன்ற சலுகைகளை விட மொபைல் டேட்டா அதிகம் உள்ள ரீசார்ஜ் திட்டங்களையே தேர்வு செய்கின்றனர். நாள் முழுவதும் டேட்டாவை பயன்படுத்தினால், இரவு நேரத்தில் டேட்டா பேக் காலியாகி விடுகிறது.தூங்குவதற்கு முன்பாக டேட்டா பேக் காலியானதும், பலரும் கூடுதல் டேட்டா அளிக்கும் டேட்டா பூஸ்டர்களை ரீசார்ஜ் செய்கின்றனர். 19 ரூபாய் டேட்டா பூஸ்டரில் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவை நமது பிளான் முடியும் வரை பயன்படுத்தலாம். ஜியோவில் பூஸ்டர் பேக்குகளை பொறுத்தவரை ரூ.19 முதல் ரூ.139 வரை பல்வேறு திட்டங்கள் உள்ளன. இந்நிலையில், ஜியோ 10 ஜிபி டேட்டா வழங்கும் ஸ்பெஷல் வவுச்சரை வெறும் 11 ரூபாய்க்கு வழங்குகிறது. இந்த பேக், 10 ஜிபி 4ஜி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இந்த டேட்டா பேக் நமது வழக்கமான டேட்டா லிமிட் முடிந்த பிறகு தற்காலிகமாக கூடுதல் டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு உதவும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜியோவின் 11 ரூபாய் ரீசார்ஜ் மூலம் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும். அதன் பிறகு வேகம் குறைந்துவிடும். இதன் வேலிடிட்டி ஒரு மணி நேரம் மட்டுமே. நெட் டேட்டா மட்டுமே இதில் கிடைக்கும். ஒரு மணி நேரத்திற்குள் 10 ஜிபி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ் போன்ற அம்சங்கள் வராது.இதுவே, 49 ரூபாய் டேட்டா வவுச்சரில் ஒரு நாள் முழுக்க எவ்வளவு வேண்டுமானாலும் 4ஜி டேட்டாவைப் பயன்படுத்தலாம். 175 ரூபாய் டேட்டா பேக்கில், ஒரு மாதம் முழுவதும் 10 ஜிபி டேட்டா கிடைக்கும். கூடுதலாக சோனி லிவ், ஜீ5, சன் நெக்ஸ்ட் உள்ளிட்ட 10 ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கும். 219 ரூபாய் டேட்டா வவுச்சரை ரீசார்ஜ் செய்தால் அது 30 நாட்களுக்கு 30 ஜிபி டேட்டா கிடைக்கும். ரூ. 289 டேட்டா வவுச்சரில் 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 359 டேட்டா வவுச்சர் 50 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த வவுச்சர்களின் வேலிடிட்டி காலம் 30 நாட்கள். 30 நாட்கள் வரை இந்த கூடுதல் டேட்டாவை அனுபவிக்கலாம்.

Related Post

கணவர், மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டிய பெண்- 7 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது

Posted by - February 20, 2023 0
கவுகாத்தி: அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு பெண் தனது கணவர் மற்றும் மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டி பாலிதீன் பைகளில் அடைத்து மேகாலயா கொண்டு சென்று…

ஆந்திரா ரெயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு, தொடர்ந்து நடைபெறும் மீட்பு பணி- ரெயில்கள் ரத்து

Posted by - October 30, 2023 0
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று இரவு விஜயநகரம் நோக்கி பாலசா பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. விஜயநகரம் மாவட்டம், கொத்தவலசா மண்டலம், கண்டகபள்ளி அலமண்டா இடையே…

ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் – காரணம் என்ன?

Posted by - March 11, 2025 0
அமெரிக்க அதிபர் ட்டம்பின் முடிவுகளால் இந்திய பங்குச்சந்தையும் இன்று கடும் சரிவை சந்தித்துள்ளன. இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்திருப்பதற்கான காரணம் என்ன? என்பது குறித்து கீழே…

கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

Posted by - October 30, 2023 0
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையம் உள்ளது. இங்கு ‘யெகோவாவின் சாட்சிகள்’ என்ற கிறிஸ்தவ சபையினரின் 3 நாள்…

கடனை அடைக்க கடன் கேட்கும் முகேஷ் அம்பானி…உலகளாவிய பணக்காரருக்கே இந்த நிலைமையா…?

Posted by - December 13, 2024 0
Reliance Industries Seeking Big Loan – முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம் மற்றும் உலகளாவிய அளவில் 100 ஆவது மிகப்பெரிய நிறுவனம் ஆக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *