பள்ளி மாணவிகளை வைத்து தொழில்… மகள் மூலம் வலை விரிப்பு.. பெண் புரோக்கரின் திடுக்கிடும் பின்னணி

201 0

சென்னையில் பள்ளி மாணவிகளை லாட்ஜுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த பெண் புரோக்கர் குடும்பத்தினரோடு சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை, வளசரவாக்கம்  வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விபசார தடுப்பு பிரிவு போலீசார் அந்த வீட்டில் ரெய்டு நடத்தினர். அப்போது பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது கண்டு, போலீசார் அதிர்ந்து போனார்கள். இதனை அடுத்து பெண் புரோக்கர் நதியா, அவரது உறவினர்கள் மற்றும் 17, 18 வயதே ஆன 2 இளம்பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்நிலையம் அழைத்து சென்று அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் படுபயங்கர சம்பவம் அம்பலமாகியுள்ளது.பெண் புரோக்கரான நதியா, 12ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் மூலம் அவரது பள்ளி தோழிகளுக்கு வலைவீசியுள்ளார். பள்ளி மாணவிகளை தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்களை மூளை சலவை செய்து பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். உள்ளூர் புரோக்கர்கள் மூலம் தன்னிடம் சிக்கிய சிறுமிகளை லாட்ஜுகளுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் அம்பலமாகியுள்ளது.சென்னை மாநகரில் பாலியல் இச்சை கொண்ட வயதான நபர்கள் பலர் சிறுமிகள் வேண்டும் என்று நதியாவிடம் கேட்டுள்ளனர். அது போன்ற நேரங்களில் 17 வயதே ஆன மாணவிகளை நதியா அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார். இதற்காக ஒருநாள் இரவுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை வசூலித்து இருப்பது தெரிய வந்தது. இதன் மூலம் ஏராளமான மாணவிகளின் வாழ்க்கையோடு நதியா விளையாடி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், கைதான புரோக்கர்களிடமிருந்து 7 செல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்சோ சட்டத்தின் கீழ் நதியா உள்பட 7 பேரை சிறையில் அடைத்துள்ள போலீசார், மீட்கப்பட்ட 2 இளம்பெண்களை காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்றால் எங்கு செல்கிறார்கள்? என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். பள்ளி மாணவிகள் மூளை சலவை செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

“அதிமுக வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது.. அரசியலில் பக்குவப்படவில்லை” – கடம்பூர் ராஜூ விமர்சனம்

Posted by - March 8, 2023 0
ஒன்றிய அரசு என்று கூறும் திமுகவிற்கு எதிராக பேசி தான் வருகிறார் தவிர எந்த எதிர்வினையும் அவர் ஆற்றவில்லை என கடம்பூர் ராஜூ கேள்வி தானாக விரும்பி…

தனியார் சேனல்களில் கட்டண உயர்வு.. கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!

Posted by - February 25, 2023 0
தனியார் சேனல்களின் கட்டண உயர்வை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும்…

உங்கள் கனவில் முருகன் வந்தாரா? அப்போ இதுதான் அர்த்தம் பக்தர்களே!

Posted by - November 11, 2025 0
முருகப்பெருமான் உங்கள் கனவில் தோன்றினால் அதற்கு என்ன அர்த்தம்? என்பதை கீழே விரிவாக காணலாம். தமிழ்க் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். தைப்பூசம், கார்த்திகை…

10% காவல் அதிகாரிகளை தவிர அனைவருமே போதை பொருள் கடத்தலுக்கு உடந்தை – பகீர் கிளப்பிய டாக்டர் ராமதாஸ்..!!

Posted by - September 20, 2024 0
போதை பொருள் கடத்தலுக்கு 850 போலீஸ் அதிகாரிகள் உடந்தை என்ற செய்தி தவறு. காவல்துறையில் உள்ளவர்களில் 10 சதவிதம் தவிர அனைவரும் உடந்தை என பாட்டாளி மக்கள்…

“என்னோட கள அரசியல் பயணம் பரந்தூரில் தொடங்குகிறது” – விஜய் பேச்சு.. முழு விவரம் இதோ!

Posted by - January 20, 2025 0
விமான நிலையத்துக்காக ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுக்கு வலியுறுத்துகிறேன். விவசாய நிலங்கள் இல்லாத பாதிப்புகள் குறைவாக இருக்கிற இடமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *