பஹல்காம் தாக்குதல்! இன்னும் ஏன் வாயை திறக்கல! பாக்.. பிரதமரை கிழித்த பாக் வீரர்கள்

130 0

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், பிரதமர் ஷேபாஸ் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் ஜம்மு & காஷ்மீரில் 26 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தை பொறுப்பேற்கச் வேண்டும் என , முன்னாள் பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா தனது நாட்டு அரசாங்கத்தை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் கனேரியா, தனது எ, அதில் தடைசெய்யப்பட்ட பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) நிழல் குழுவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது மெளனத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், பிரதமர் ஷேபாஸ் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? உங்கள் படைகள் ஏன் திடீரென்று மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன? ஏனென்றால் ஆழமாக, உங்களுக்கு உண்மை தெரியும் நீங்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்க்கிறீர்கள். வெட்கமாக இருக்கிறது, என்று கனேரியா பதிவிட்டுள்ளார்

முகமது ஹபீஸ்:

இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் தனது மௌனத்தை உடைத்து கலைத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அதில் , “சோகமும் மனவேதனையும்” என்று இரண்டு வார்த்தைகளில் ட்வீட் செய்தார். இந்தப் பதிவு விரைவில் வைரலாகி, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது,

 

இவர்கள் இருவரின் கருத்துக்கு ஒரு சில தரப்பினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள்:

இந்திய கிரிக்கெட் வீரர்களும் தங்கள் வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்தனர். விராட் கோலி இந்த தாக்குதலை “மிகவும் கவலையளிக்கிறது” என்று கூறினார், அதே நேரத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், “இழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரார்த்தனைகள். குற்றவாளிகள் விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்தியா பதிலடி கொடுக்கும்” என்று எழுதினார்.

சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், இர்பான் பதான் உள்ளிட்ட பிற கிரிக்கெட் ஜாம்பவான்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதரவாக தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர்.

Related Post

ஜெர்மனியில் 2-ம் உலகப்போர் வெடிகுண்டு கண்டெடுப்பு: 13 ஆயிரம் பேர் வெளியேற்றம்

Posted by - August 8, 2023 0
19-ம் நூற்றாண்டின் மத்தியில் 1939-லிருந்து 1945 வரை உலகின் பெரும்பாலான நாடுகள், ஆக்ஸிஸ் (Axis) மற்றும் அல்லீஸ் (Allies) என இரு அணிகளாக பிரிந்து நின்று போரிட்டன.…

எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது!

Posted by - March 4, 2026 0
ஈரான் முதலில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததற்கான தகவல்கள் இல்லை என அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் கூறியிருக்கிறது. ஈரானால் இஸ்ரேலுக்குத்தான் அச்சுறுத்தலே தவிர, அமெரிக்காவுக்கு அல்ல என்று…

“ஆட்டம்” காண துவங்கிய “ஆயிரம்” வருட கோபுரம்

Posted by - December 2, 2023 0
வட இத்தாலியில் உள்ள போலோனா (Bologna) நகரில் இரு மிக பெரிய கோபுரங்கள் அருகருகே உள்ளன. உலக அளவில் பல வரலாற்று நூல்கள், குழந்தைகளுக்கான பாடல்களிலும், பயண…

அமெரிக்காவின் பித்தலாட்டம்.! ட்ரம்ப்பை சந்திக்கும் பாக். ராணுவ தளபதி-பாகிஸ்தானியர்கள் எதிர்ப்பு

Posted by - June 18, 2025 0
பாகிஸ்தான் ராணுவ தளபதியை நாங்கள் அழைக்கவே இல்லை என்று அமெரிக்கா கூறிய நிலையில், அமெரிக்காவில் ட்ரம்ப்-அசிம் முனிர் சந்திப்பு நிகழ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ராணுவத்தின்…

‘விஷம்’ கக்கும் பாகிஸ்தான் பின்னணியில் செயல்படுவோரை அடையாளம் காண்பது அவசியம்!

Posted by - August 14, 2025 0
சில நாட்களாக பாகிஸ்தானிடம் இருந்து வரும் தடித்த வார்த்தைகள் இந்திய அரசும், மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக உள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *