புதுக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்…..

179 0

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அது குறித்து வரும் டிச.23-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து முறைப்படி அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் மாத தொடக்கத்தில் ஓபிஎஸ் டெல்லி சென்ற நிலையில், கட்சியை பதிவு செய்ய சென்றதாக கூறப்பட்டது. ஏற்கெனவே அறிவித்த கூட்டத்தை ஓபிஎஸ் தள்ளிவைத்திருந்த நிலையில், ஓபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையின் லெட்டர் பேடில் ‘உரிமை மீட்பு குழு’ என்பதற்கு பதிலாக ‘உரிமை மீட்பு கழகம்’ என மாற்றப்பட்டுள்ளது. முகவரியும் பசுமை வழிச்சாலைக்கு பதிலாக, நந்தனம் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் ஓபிஎஸ் சத்தமின்றி புதுக்கட்சியை தொடங்கிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.

மேலும் ஓபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் டிச.23-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அல்லது அடுத்த நாள் வரும் எம்ஜிஆர் நினைவு தினத்தில் முறைப்படி புதுக்கட்சியை அறிவிக்க ஓபிஎஸ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Related Post

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95

TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு

Posted by - June 2, 2026 0
TN By-Election: தம்ழிநாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேதலில் ஆளுங்கட்சியான தவெகவை வீழ்த்த, ஒருங்கிணைந்து செயல்பட திமுக மற்றும் அதிமுக திட்டமிட்டுள்ளனவாம். TN By-Election: தம்ழிநாட்டில் நடைபெற உள்ள…
tvkvijay cm

TVK Vijay : ஆட்சி அமைக்க அழைப்பு விடுங்க… ஆளுநருக்கு கடிதம் எழுதிய விஜய்.! என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா.?

Posted by - May 5, 2026 0
TVK leader Vijay letter to the governor : தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி தவெக…
dmk 2026

முரண்டு பிடிக்கும் விசிக, ம.கம்யூ, மநீம.! கூட்டணிக்குள் நடப்பது என்ன.?

Posted by - March 20, 2026 0
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்குள் தொகுதி பங்கீட்டை…
Generated Image February 09 2026 3 52PM

ரூ.10.71 லட்சம் கோடி கடன் சுமை

Posted by - February 17, 2026 0
Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசின் கடன்சுமை 2027ம் நிதியாண்டின் முடிவில் ரூ.10.71 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. Tamil…
Generated Image January 16 2026 5 04PM

‘‘திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ – பொங்கல் விழாவில் பழனிசாமி பேச்சு

Posted by - January 16, 2026 0
மேட்டூர்: “எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும், இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுக ஆட்சி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *