போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் 700 பேர் கைது – சென்னை அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் முற்றுகை

100 0

சென்னை: பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் ஆகிய முக்கிய இடங்களை முற்றுகையிட முயன்ற 700-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளுக்காக நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.

முன்னதாக ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர். உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று பின்னர் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தொடர் போரட்டங்களை நடத்திவந்த நிலையில் கடந்த 150 நாட்களுக்கும் மேலாக மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை மற்றும் தலைமைச் செயலகம் அருகே போராட்டம் நடத்தி வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 27-ம் தேதி கோட்டைநோக்கி பேரணி என்ற வகையில் பாரிமுனையில் போராட்டம் நடத்தினர். இதில் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் முயன்றனர். அறிவாலயத்துக்கு முன்பு உள்ள அண்ணா சாலையில் அமர்ந்து, தமிழக அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களை காவல் துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மைப் பணியாளர்களை போலீஸார் கைது செய்ய முயன்றபோது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஏராளமான பணியாளர்கள் திரண்டு திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், அங்கு போராட்டம் நடத்த அனுமதி மறுத்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களையும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். இந்த நடவடிக்கையின் போது சில பெண் பணியாளர்கள் மயக்கமுற்று விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இறுதியாக அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடத்தை தொடர்ந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே கருணாநிதி சிலை முன்பும் தூய்மை பணியாளர்கள் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர். அங்கேயும் போலீஸார், அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

அந்தவகையில் நேற்று நடந்த போராட்டங்களில் 700-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையின் மூன்று முக்கிய இடங்களில் நடந்த இந்தப் போராட்டங்களால் அண்ணா சாலை மற்றும் காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Post

பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம் : தமிழகத்தில் எவ்வளவு வீடு கட்டப்பட்டது தெரியுமா?

Posted by - April 12, 2024 0
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை வழங்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அதாவது பிரதமர் வீடு கட்டும்…

விஜய் மீது செருப்பு தூக்கி வீசிய நபர்.. செருப்பால் அடிக்கும் அளவிற்கு என்ன பிரச்சனை

Posted by - December 29, 2023 0
அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் நேற்று இரவு விஜயகாந்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் வந்திருந்தார். இவர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் போது,…

தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்

Posted by - May 14, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக பரப்புரைகளை தீவிரப்படுத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல்…

குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று காலை முதல் அனுமதி- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Posted by - June 20, 2023 0
தென்காசி: தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுவது தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் ஆகும். தென்மேற்கு பருவமழை காலங்களில்…

3 பேரின் பதவி பறிப்பு – காரணம் என்ன..?

Posted by - September 30, 2024 0
தமிழக அமைச்சரவையில் புதியதாக நான்கு பேர் இணைந்திருக்கும் நிலையில், மூன்று பேரின் பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது. புதியவர்களுக்கு பதவி கிடைத்ததற்கான காரணம் குறித்தும், பழையவர்களின் பதவி பறிப்பிற்கான பின்னணி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *