2026 புத்தாண்டு கொண்டாட்டம் : இதெற்கெல்லாம் அனுமதி இல்லை..சென்னையில் கட்டுப்பாடுகள் விதிப்பு!

131 0

அடுக்குமாடி குடியிருப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : புத்தாண்டு (2026) கொண்டாட்டத்தை முன்னிட்டு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இன்று (டிசம்பர் 31, 2025) மற்றும் நாளை (ஜனவரி 1, 2026) மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் குளிக்கவோ, கடலில் இறங்கவோ அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகள் மற்றும் நெரிசல் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மது அருந்த அனுமதிக்கப்பட்ட ஹோட்டல்கள், பார்கள் உள்ளிட்ட இடங்களுக்கு குழந்தைகளை கூட்டிச் செல்ல அனுமதி இல்லை என்று போலீசார் எச்சரித்துள்ளனர். பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கவும் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு ஒலிப்பெருக்கி பயன்படுத்த விரும்பினால் உரிய அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சத்த தொல்லை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புத்தாண்டு இரவில் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தடுக்க இன்று இரவு 9 மணி முதல் சென்னையில் 425 இடங்களில் வாகன தணிக்கை நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். டிரைவிங் லைசென்ஸ் பறிமுதல், அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படும்.பைக் ரேஸ் தடுப்பு நடவடிக்கையாக கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் 30 கண்காணிப்பு மற்றும் சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் பைக் ரேஸ் காரணமாக ஏற்பட்ட விபத்துகளை தவிர்க்க இது உதவும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த கட்டுப்பாடுகள் புத்தாண்டு கொண்டாட்டத்தை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் நடத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் பாதுகாப்பான முறையில் நடைபெற வேண்டும் என்று அரசு விரும்புகிறது. இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

சனி சஷ யோகம்: 2025-ல் பண வரவு முதல் புதிய வேலைவாய்ப்பு வரை.. அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்!

Posted by - November 12, 2024 0
சனி தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். இது சஷ ராஜயோகத்தை உண்டாக்கும். இந்த காலம் மூன்று ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். வேத ஜோதிடத்தில்,…
%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 %E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81 2

CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு – சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?

Posted by - May 30, 2026 0
CM Vijay TN Govt: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை, பட்ஜெட் என அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. CM Vijay…

அன்றே மோசடி செய்த நிகிதா.. அதுவும் அவர் பேர்ல? அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்

Posted by - July 3, 2025 0
2011ல் துணை முதலமைச்சரின் பிஏ-வை வைத்து வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கின் எஃப் ஐஆர் தற்போது வெளியாகியுள்ளது. திருப்புவனம் இளைஞர் அஜித்…
Generated Image November 13 2025 5 12PM

சட்டம் – ஒழுங்கைக் காப்பதில் காவல்துறை தோல்வி அடைந்துள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Posted by - November 13, 2025 0
சட்டம் – ஒழுங்கைக் காப்பதில் தமிழக காவல்துறை தோல்வி அடைந்துள்ளதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் குற்றம்…

ஆடி கடைசி வெள்ளி… மறந்துடாதீங்க! கண்டிப்பாக இதை செய்யுங்கள்…

Posted by - August 14, 2024 0
ஆடி மாதத்தில் சிறப்புக்குரிய நாட்கள் எத்தனை வந்தாலும் ஆடி வெள்ளிக்கு மட்டும் ஏன் தனி சிறப்புகள் உள்ளன. பல கொண்டாட்டங்களுக்கு பிறகு தற்போது ஆடி மாதத்தின் இறுதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *