மணமணக்கும்… கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலா

345 0

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசிக்க தொடங்கிவிட்டீர்களா? நீங்கள் எப்போதும் வித்தியாசமான சுவையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சமைத்து கொடுக்க விரும்புவீர்களா?

உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த சேனைக்கிழங்கைக் கொண்டு கொங்குநாடு ஸ்டைலில் ஒரு மசாலா செய்யுங்கள். இந்த சேனைக்கிழங்கு மசாலா சாதத்திற்கு ஒரு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலா | Kongunad Style Senai Kilangu Masala  In Tamil - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* சேனைக்கிழங்கு – 250 கிராம்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – 1 டீஸ்பூன்

* கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு…

* கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* பட்டை – 2 துண்டு

* கிராம்பு – 2

* பூண்டு – 6 பல்

* இஞ்சி – 1 இன்ச் (நறுக்கியது)

* வரமிளகாய் – 5

* சோம்பு – 1 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* துருவிய தேங்காய் – 1/2 கப்

* கசகசா – 1 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – 1 டீஸ்பூன்

* தண்ணீர் – 1 கப்

தாளிப்பதற்கு…

* கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் சேனைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை மெல்லிய விரல் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சேனைக்கிழங்கை போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5-7 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சேனைக்கிழங்கை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து, நன்கு வதக்கி இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பூண்டு, இஞ்சி, வரமிளகாய், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு சில நொடிகள் வதக்க வேண்டும்.

* பின் அதில் துருவிய தேங்காய், கசகசா, மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்னர் அதை மிக்சர் ஜாரில் போட்டு, நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் அரைத்த மசாலா மற்றும் வதக்கி வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து, மசாலா நன்கு சேனைக்கிழங்குடன் சேரும் வரை கிளறி இறக்கினால், சுவையான கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலா தயார்.

Related Post

ஐபிஎல் 2024.. கஸ்டமர்கள் குதூகலம்.. 3 மாதங்களுக்கு டேட்டா.. மாதம் ரூ.222 மட்டும்.. Jio கிரிக்கெட் திட்டம்!

Posted by - March 19, 2024 0
ஐபிஎல் 2024 (IPL 2024) போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கும் வேளையில் ஜியோ நிறுவனம், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தட்டித்தூக்கும் திட்டங்களை கொடுக்கிறது.…

மனைவி தங்கள் கணவனிடம் ஒருபோதும் பேசக்கூடாத விஷயங்கள்..

Posted by - December 17, 2025 0
கணவன் மனைவி ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, சிறிய விஷயங்களைப் பெரிதாக்காமல் முன்னேறினால், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.அன்பு, நம்பிக்கை, மரியாதை ஆகியவை வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு மூன்று முக்கிய…

சன் டிவி சீரியல்கள் டிஆர்பியை தோற்கடிக்க முடியாமல் திணரும் விஜய் டிவி.. இந்த வாரத்தின் டாப் 5 சீரியல்கள்

Posted by - December 21, 2024 0
சீரியல்கள் ஒரு படம் ரிலீஸ் ஆனால் அப்படம் எவ்வளவு எங்கெங்கு வசூலிக்கிறது என்பதை தான் ரசிகர்கள் அதிகம் கவனிப்பார்கள். அதேபோல தான் சின்னத்திரையில் ஒரு சீரியல் ஓடுகிறது…

சீக்ரெட்டாக இன்னொரு திருமணம் செய்துகொண்டேன்- வனிதா விஜயகுமார்

Posted by - July 18, 2023 0
வனிதா விஜயகுமார் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்து இப்போது அட்டகாசமாக நடித்து வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். படங்கள் நடித்துவந்த இவர் இடையில் திருமணம்,…

‘மலிவான அரசியல் செய்கிறார்கள்’..மறக்குமா நெஞ்சம் இசைநிகழ்ச்சியின் குளறுபடிக்கு ஏ.ஆர் ரஹ்மானின் மகள் பதிவு

Posted by - September 12, 2023 0
மறக்குமா நெஞ்சம் கடந்த 10 -ம் தேதி சென்னை உள்ள ஓ.எம்.ஆர் சாலையில் நடைபெற்ற ஏ.ஆா். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரியைக் காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *